எதிர்வருகின்ற காலங்களில் கிழக்கு மாகாண கல்வி வளர்ச்சியில் இப்பணிமனையின் பங்கானது அளப்பரியதாக இருக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை எனவும் அவர் குறிப்பிட்டார. கிழக்கு மாகாணத்தின் கல்வி வளர்ச்சிக்காக பாடுபடுகின்ற கிழக்கு மாகாண முதலமைச்சர் கிழக்கின் பாலர்; கல்விக்கு வித்திட்ட வித்தகன் என்றால் அது மிகையாகாது எனவும் அவர் குறிப்பிட்டார்.
10/14/2010
| 0 commentaires |
கிழக்கு மாகாண கல்வி வளர்ச்சியில் பாலர் பாடசாலை கல்விப்பணியகம்அளப்பரிய பங்கு வகிக்கும்* கல்விப்பணிப்பாளர்.-
கிழக்கு மாகாண பாலர் பாடசாலை கல்விப்பணியகம் இன்று(13.10.2010) திருகோணமலை உவர்மலையில் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களால் உத்தியோக பூர்வமாக திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் கிழக்கு மாகாண கல்வி பணிப்பாளர் ஜனாப் எம். ர்p. எ நிஷாம் அவர்கள் சிறப்பதிதியாக கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்து அவர் பேசுகையில,; முன்பள்ளிகள் எப்போதும் ஓர் சமூகத்தை இணக்கப்படுத்தவதற்கான ஆரம்ப நிலைமையாக இருக்கின்ற ஓர் மகிழ்ச்சிக்குரிய இடமாக திகழ வேண்டும். குறிப்பாக அதிகமான பெற்றோர்களின் பங்களிப்பு இவ் முன்பள்ளிக்கு கிடைப்பது ஒரு நல்ல விடயமாகும். அதே போல் விமர்சனம் எதுவுமில்லாமல் நிதிகளை வழங்குகின்ற பெற்றோர் குழாம் இருக்கின்றார்கள.; இவ்வாறாக பெற்றோர்கள் முழுமையான ஆதரவாளர்களாக இருக்கின்ற அதேவேளை பாலர்பாடசாலைகளுக்கான கல்வி முறைமையினை மீறுகின்றவர்களாகவும் ஒரு சில பெற்றோர்கள் இருப்பதனால் அச் சிறார்கள் தங்களது சிறு பராயக் கலிவியினை மேற்கொள்வதற்கு தடையாக இருக்கின்றது. அதாவது பல்வேறு ஆய்வுகள் செயற்றிட்டங்கள் மூலம் குறிக்கப்பட்ட பாடவிதானங்களைக் கொண்டு கல்வி புகட்டப்படும் போது சில பெறு;றோர்கள் தங்களது பிள்ளைகளுக்கு எழுத்தினை முதலில் கற்பிக்கக் கோருகின்றார்கள். இதனால் அக் குழந்தைகள் மேல் வகுப்பகளுக்கு செல்கின்ற போது அங்கு பாகுபாடு நிலவுகின்றது. மாணவர்கள் தரம்பிரிக்கப்படுகின்றார்கள். உண்மையில் குறித்தொதுக்கப்பட்ட பாடவிதானங்களை மாத்திரம் ஒட்டுமொத்த பாலர் பாடசாலைகளும் கற்பிக்குமாக இருந்தால் அனைத்து சிறர்களும் சமமாகக் கருதப்படுவார்கள். மாறாக ஒருசில பாலர் பாடசாலைகள் தங்களது குறித்த சில அனுகூலங்களைக்; கருத்திற் கொண்டு முதலில் எழுத்தைக் கற்பிக்கின்றார்கள். அதாவது பாலர்களுக்கான கல்வித்திட்டத்திற்கு அப்பால் போதிக்கின்றார்கள். அதனால் ஏனைய பாலர் பாடசாலை மாணவர்கள் பாதிப்புக்குள்ளாகின்றார்கள். இது தொடர்பான பிரச்சினைகளை எல்லாம் இப் பணியகம் கருத்திற்கொண்டு செயற்படும் என தான் நம்புவதாகவும் அவர் தெரிவித்தார்.
எதிர்வருகின்ற காலங்களில் கிழக்கு மாகாண கல்வி வளர்ச்சியில் இப்பணிமனையின் பங்கானது அளப்பரியதாக இருக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை எனவும் அவர் குறிப்பிட்டார. கிழக்கு மாகாணத்தின் கல்வி வளர்ச்சிக்காக பாடுபடுகின்ற கிழக்கு மாகாண முதலமைச்சர் கிழக்கின் பாலர்; கல்விக்கு வித்திட்ட வித்தகன் என்றால் அது மிகையாகாது எனவும் அவர் குறிப்பிட்டார்.
0 commentaires :
Post a Comment