10/27/2010

சோமாலியாவின் கடல் எல்லையில் ஜேர்மன் கப்பல் கடத்தப்பட்டது

சோமாலியாவின் கடற் பிராந்தியத்தில் ஜேர்மன் கப்பலொன்றை கொள்ளையர்கள் கடத்திச் சென்றனர். சனிக்கிழமை கடத்தப்பட்ட இந்தக் கப்பலில் எத்தனை பேர் இருந்தனர், என்ன பொருட்களை ஏற்றிச் சென்றது, தற்போது இக்கப்பல் எங்கே உள்ளது போன்ற தகவல்கள் இதுவரை கிடைக்கவில்லையென அறிவிக்கப்பட்டுள்ளது. இந்து சமுத்திரத்தின் யேடன்குடா முனையில் இக்கப்பல் கடத்தப்பட்டது.
இரண்டு வாரங்களுக்கு முன் இவ்வாறு இன்னுமொரு கப்பல் கடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
ஜேர்மன் கப்பல் கம்பனிக்குச் சொந்தமான பெலுகா என்ற இக்கப்பல் சிங்கப்பூர் கொடியுடன் சென்றுகொண்டிருந்த போது கொள்ளையர்களால் கடத்தப்பட்டது. சோமாலியாவில் பலமான அரசாங்கம் இல்லை.
இதனால் சட்டம், ஒழுங்கு என்பன அந்நாட்டில் சீர்குலைந்துள்ளன. கொள்ளையர்களின் அட்டகாசம் சோமாலியாவை அண்மித்துள்ள கடற் பிரதேசங்களில் தலைவிரித்தாடுகின்றது. இப்பிராந்தியத்தினூடான சர்வதேச கப்பல் போக்குவரத்துகளும் பாரிய அச்சுறுத்தலை எதிர்கொள்கின்றது.

0 commentaires :

Post a Comment