இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட கிளிநொச்சி மாவட்டத்தில் இந்த வருட பெரும்போகத்தில் சுமர் 85 வீதமான காணியில் வேளாண்மை செய்யப்படவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினரான எம். சந்திரகுமார் தெரிவித்துள்ளார்.
அந்த மாவட்டத்தில் மொத்தமுள்ள ஒரு லட்சத்து ஐம்பதினாயிரத்துக்கும் அதிகமான ஏக்கர்கள் நெல் வயல்களில் ஒரு லட்சத்து இருபத்தாறாயிரம் ஏக்கருக்கும் அதிகமான காணிகளில் இந்தத் தடவை விவசாயம் செய்யப்படவுள்ளதாக அவர் தெரிவித்தார்.
இந்த வருட நெற்செய்கையில் ஈடுபடவுள்ள விவசாயிகளுக்கு, உழுதலுக்காக ஏக்கருக்கு எண்ணாயிரம் ரூபாய் பணமும், விதை நெல் இலவசமாகவும் வழங்கப்படவுள்ளதாகவும், உரம் மான்ய விலையில் வழங்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
0 commentaires :
Post a Comment