10/30/2010

தேசிய மட்ட விளையாட்டு விழா; காத்தான்குடி மாணவன் மஸி கெளரவிப்பு

கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கிடையில் திருகோணமலையில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டியில் முப்பாய்ச்சல் போட்டியில் கலந்துகொண்டு முதலாமிடம்பெற்று தேசிய மட்டத்துக்கு தெரிவான காத்தான்குடி மத்திய மகா வித்தியாலய தேசிய பாடசாலை மாணவன் எம். யூ. எச். மஸி காத்தான்குடியில் நடைபெற்ற சாதனையாளர் பாராட்டு விழாவில் விருது சான்றிதழ் வழங்கி கெளரவிக்கப்பட்டார்.
காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளன கல்வி அபிவிருத்திச்சபை நடாத்திய “சாதனையாளர் பாராட்டு விழா 2010” அண்மையில் (23.10.2010) காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் இஸ்லாமிய கலாசார மண்டபத்தில் பிரதித் தலைவர் சட்டத்தரணி ஏ. எல். அப்துல் ஜவாத் தலைமையில் நடைபெற்றது.
இச்சாதனையாளர் பாராட்டு விழாவின் போது பிரதம அதிதியாகக் கலந்துகொண்ட சிறுவர் அபிவிருத்தி மகளிர் விவகார பிரதி அமைச்சர் எம். எல். ஏ. எம். ஹிஸ்புல்லாஹ் மாகாண மட்டத்தில் தெரிவான மாணவன் எம். யூ. எச். மஸிக்கு விருது சான்றிதழ் வழங்கி கெளரவிக்கப்பட்டார்.
இவ்விழாவில் கெளரவ அதிதியாக கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் எம். ரி. எம். நிஸாம், சிறப்பு அதிதியாக மட்டக்களப்பு வலயக் கல்விப் பணிப்பாளர் யூ. எல். எம். ஜெயினுதீன் மற்றும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள், நகரசபை உறுப்பினர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள், உலமாக்கள், பெரியோர்கள், பெற்றோர்கள், அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள், சம்மேளன உறுப்பினர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்

0 commentaires :

Post a Comment