மியன்மார் நாட்டில் பாராளுமன்ற தேர்தல் வருகிற 7ந் திகதி நடக்கிறது. இதில் ஜனநாயகத்துக்காக போராடிவரும் எதிர்க்கட்சி தலைவர் சூ-கீ வாக்களிக்க மாட்டார் என்று அவரது வக்கீல் நியான் வின் தெரிவித்தார்.
வீட்டுக்காவலில் வைக்கப்பட்டு இருக்கும் சூ-கீ யைச் சந்தித்துவிட்டு திரும்பிய அவர் நிருபர்களிடம் கூறுகையில், இந்த தேர்தல் சட்டப்படி நடக்கவில்லை. எனவே நான் வாக்களிக்க மாட்டேன் என்று அவர் தெரிவித்தார்.
அரசியல் சட்டப்படி, சிறைத்தண்டனை பெற்ற கைதிகளுக்கு வாக்களிக்க உரிமையில்லை. ஆனால் அதிகாரிகள், வாக்களிப்பதற்கு அவருக்கு உரிமை உண்டு என்று தெரிவித்து இருக்கிறார்கள். இது பற்றி சூ-கீ கூறுகையில், நான் வாக்களிக்க மாட்டேன் என்று கூறிவிட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
20 ஆண்டுகளுக்கு பிறகு இப்போது தான் முதல் முறையாக இராணுவ ஆட்சியாளர்கள் முதன் முறையாக தேர்தல் நடத்துகிறார்கள். 1990ம் ஆண்டு நடந்த தேர்தலில் சூ- கீ யின் ஜனநாயகத்துக்கான தேசிய லீக் கட்சி வெற்றி பெற்றது.
ஆனால் இராணுவ ஆட்சியாளர்கள் அவரை ஆட்சி செய்ய அனுமதிக்கவில்லை. அவரை வீட்டுக்காவலில் வைத்து இருக்கிறார்கள். தேர்தலை புறக்கணித்ததால் அவரது கட்சியையும் அதிகாரிகள் கலைத்துவிட்டார்கள்.
0 commentaires :
Post a Comment