10/15/2010

இஸ்ரேல் இருக்கின்றவரை மத்திய கிழக்கில் அமைதி சாத்தியமில்லை; லெபனானில் ஈரான் ஜனாதிபதி

லெபனானுக்கு இரண்டு நாள் விஜயம் மேற்கொண்டுள்ள ஈரான் ஜனாதிபதி அஹ்மதி நெஜாத் இரண்டாவது நாளான நேற்று வியாழக்கிழமை ஹிஸ்புல்லா அமைப்பின் கட்டுப்பாட்டு பிரதேசங்களுக்குச் சென்றார்.
இவரை ஆயிரக்கணக்கான ஷியா முஸ்லிம்கள் மாலை அணிவித்தும், மலர் தூவியும் அழைத்துச் சென்றனர். இஸ்ரேலின் எல்லையிலுள்ள பென்ற் ஜெபிற் என்ற கிராமத்துக்கும் ஈரான் ஜனாதிபதி செல்வார்.
(இச்செய்தி எழுதப்படும் வரை சென்றதாகத் தகவல்கள் இல்லை). 1996 ஆம் ஆண்டும் 2006 ஆம் ஆண்டும் இஸ்ரேல் லெனான் யுத்தங்கள் மூண்டபோது பென்ஸ் ஜெபிற் நகரம் இஸ்ரேலினால் கடுமையாகத் தாக்கப்பட்டது. அடிக்கடி இந்நகரம் இஸ்ரேலின் கொடூர தாக்குதலுக்குள்ளாவதால் அழிவின் தடயங்கள் இன்னும் உள்ளன.
ஹிஸ்புல்லா வீரர்களின் மண்ணறைகளும் இக்கிராமத்திலே உள்ளன. எறிகணை ஷெல் தாக்குதல்களை இஸ்ரேல் மீது ஏவ ஹிஸ்புல்லாக்களுக்கு இந்நகரம் பொருத்தமான இடத்திலுள்ளதால் ஈரான் ஜனாதிபதி பென்ற் ஜெபிற் செல்வது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
இந்நகரைப் புனரமைக்க நிதியுதவி வழங்கும் ஈரான் ஜனாதிபதி, இஸ்ரேல் மீது கற்களை எறியவுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. ஆனால் ஹிஸ்புல்லா தலைவர் ஷேக் நஸ்ரல்லா இதை மறுத்துள்ளார். பாதுகாப்புக் காரணங்களுக்கு ஹிஸ்புல்லாவின் இராணுவம் நவீன ஆயுதங்களை வைத்துள்ளது.
இதற்கென ஆயுதக்கிடங் கிலிருந்து புதிய ஆயுதங்கள் எடுக்கப்பட்டதாக கருதும் இஸ்ரேல் திடீர் தாக்குதலை இஸ்ரேல் மீது நடத்தும் நோக்குடன் ஹிஸ்புல்லா நவீன ஆயுதங்களைச் சேகரிப்பதாகவும் குற்றம்சாட்டியுள்ளது.
விசேட உரையாற்றிய ஈரான் ஜனாதிபதி கூறியதாவது, இஸ்ரேல் இருக்கும் வரை மத்திய கிழக்கில் அமைதி வராது. ஆக்கிரமிப்பிற்கான விலைகளை இஸ்ரேல் என்றைக்காவது செலுத்த நேரிடும். இஸ்ரேலின் இருப்பை எதிர்த்துப் போராடும் ஹிஸ்புல்லாக்களின் துணிவைப் பாராட்டுகிறேன் என்றார்.
குண்டு துளைக் காத கண்ணாடிக் கூண்டில் உரையாற்ற ஏற்பாடு செய்யப்பட்டபோதும் அஹ்மெதி நெஜாத் வெளியில் நின்றவாறே உரையாற் றினார். இதற்கு முன்னர் லெபனான் ஜனாதிபதி மைகல் சுலைமான் பிரதமர் சாட் ஹரிரி ஆகியோரையும் சந்தித்தார்.
முன்னாள் பிரதமர் ரபிக் ஹரிரி (தற்போ தைய பிரதமரின் தந்தை) 2005 இல் படுகொலை செய்யப்பட்டார். இக் கொலையை ஹிஸ்புல்லாக்களே செய்ததாக லெபனான் பிரதமர் குற்றம்சாட்டியமை தெரிந்ததே.

0 commentaires :

Post a Comment