திருகோணமலை மாவட்டத்தில் உள்ள உள்ளுராட்சி நிறுவனங்களில் நிலவிய தொநுட்ப உத்தியோகத்தர் வெற்றிடங்கள் இன்று புதிய நியமனங்கள் வழங்கப்பட்டதன் மூலம் சீர் செய்யப்பட்டுள்ளது.
கிழக்கு மாகாணத்தில் உள்ள திருகோணமலை மாவட்டத்தின் பல்வேறு உள்ளுராட்சி நிறுவனங்களில் தொழிநுட்ப உத்தியோகத்தர்கள் பற்றாக்குறை நிலவியதன் காரணமாக பல்வேறு வகையான அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் முன்னெடுப்பதில் உள்ளுராட்சி நிறுவனங்களின் தலைவர்கள் பல்வேறு தடங்கல்களை எதிர்நோக்கி வந்தனர் இது விடயமாக கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டதன் காரணமாக இன்று முதல் செயற்படும் வகையில் தொழிநுட்ப உத்தியோகத்தர்கள் பதவி வெற்றிடம் நிலவிய சகல பிரதேச சபைகளுக்கும் தொழிநுட்ப உத்தியோகத்தர்கள் நியமிக்கப்பட்டனர்.

இன்று காலை முதலமைச்சர் காரியாலயத்தில் நடைபெற்ற வைபவத்தில் கிழக்கு மாகாண முதலமைச்சர் இவர்களுக்கான நியமனக் கடிதங்களை வழங்கி வைத்தார்.
இதன் பயனாக “நெல்சிப்” கருத்திட்டம் திருகோணமலை மாவட்டத்தில் வெற்றிகரமாக முன்னெடுக்கப்படக்கூடியதாகவும் இதன் காரணமாக பல வறிய குடும்பங்கள் பயனடைய வாய்ப்பு உள்ளதாகவும் நம்பப்படுகின்றது.
0 commentaires :
Post a Comment