10/30/2010

யுத்தத்தினால் முழுமையாக பாதிக்கப்பட்ட எமது கிழக்கு மாகாணத்தின் இன்றுள்ள எமது ஒரே நம்பிக்கை கல்வி வளர்ச்சிதான் ***வாகரைபரிசளிப்பு விழா நிகழ்வில் முதலமைச்சர்

img_2493
இன்று (29.10.2010) வாகரை கோட்டக்கல்வி அதிகாரி திரு குணலிங்கம் தலைமையில் கோட்ட மட்டத்திலான பரிசளிப்பு விழா நிகழ்வு இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றிய கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன்
கல்வியின் எழுச்சியானது கிராமப்புறங்களில் இருந்து தோன்றும் போதுதான் நாடும் மக்களும் முன்னேற்றமடைவார்கள் - இது மகாத்மாகாந்தியின் அற்புத வாக்கு.
  இன்று கிழக்கு மாகாணமானது மாகாணசபை மக்கள் பிரதிநிதிகளால் பொறுப்பேற்கப்பட்ட பின்பு கல்வியில் பாரிய வளர்ச்சி கண்டு வருகின்றது. குறிப்பாக 5ம் தர புலமைப்பரிசில் பரீட்சை சாதாரணதர பரீட்சைகளில் கிழக்கு மாகாணம் வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத பாரிய முன்னேற்றத்தைக்கண்டு வருகின்றது. இது எமது சமுகத்தில் உயர்தகு வளர்ச்சியின் நல்லதொரு அறிகுறியாகும். இக்கல்வி வளர்ச்சியானது பின்தங்கிய கிராமப்புற மாணவர்களிடம் இருந்து வெளிப்படுவது இன்னும் சிறப்பான அம்சமாகும்.
யுத்தத்தினால் முழுமையாக பாதிக்கப்பட்ட எமது கிழக்கு மாகாணத்தின் இன்றுள்ள எமது ஒரே நம்பிக்கை கல்வி வளர்ச்சிதான், இக்கல்வி வளர்ச்சியின் ஊடாகவே சிதைவடைந்த எமது சமுதாயத்தை மீள கட்டியெழுப்புவதுடன் நாம் எதிர்பார்க்கின்ற சமூக அரசியல் இலக்குகளையும் எய்தமுடியும் அவ்வகையில் கிழக்கு மாகாணத்தில் பின்தங்கிய பகுதியில் இருந்து ஏற்பட்டுவரும் கல்வி மறுமலர்ச்சியில் ஒரு சிறப்பம்சம் இருக்கின்றது.
பின்தங்கிய கிராமப்புற மாணவர்கள் யுத்தத்தின் வடுக்களையும் சமுதாயத்தின் ஏற்றத்தாழ்வுகளையும் நேரடியாக உணர்ந்தவர்கள், அவ்வலியை அனுபவித்தவர்கள், எனவே இவர்களினுடாக ஏற்படும் கல்வி மறுமர்ச்சியானது சமுதாயம் சார்ந்ததாக சமுக நலனுக்கு முக்கியத்துவம் கொடுப்பதாக அமையும் என்பதில் ஐயமில்லை.
அவ்வகையில் யுத்தத்தினால் மிகவும் பாதிக்கப்பட்ட, யுத்த்தின் இடர்பாடுகளை நேரடியாக உணர்ந்த, இப்பிரதேச மாணவர்களிடம் இருந்து வெளிப்படும் திறமையானது மிக முக்கியத்துவம் கொடுத்தே பேணிப்பாதுகாத்து ஊக்கிவிக்கப்பட வேண்டிய ஒன்றாகும். கிழக்கு மாகாணத்தில் உள்ள அனைத்து பின்தங்கிய பகுதிகளிலும் கல்வி ரீதியான மறுமலர்ச்சி ஏற்பட முதலமைச்சர் என்ற தோரணையிலும் அதனை தாண்டியும் ஒத்துழைப்பும் ஆதரவும் வழங்க திடசங்கர்ப்பம் பூண்டுள்ளேன். அவ்வகையில் இந்நிகழ்வை மனதார வாழ்த்துவதுடன் இதில் பங்கெடுப்பதிலும் மகிழ்ச்சி அடைகின்றேன். என்று கிழக்கு மாகாண முதலமைச்சர் தனது உரையில் குறிப்பிட்டார்..
img_2509
img_2511
img_2588

0 commentaires :

Post a Comment