கிழக்கு மாகாண கல்வி அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் தமிழ் இலக்கிய விழாவில் உரை நிகழ்த்துவதில் உளம் புளகாங்கிதம் அடைகின்றேன்.
கிழக்கு மாகாண சபை தோற்றுவிக்கப்பட்டதன் பின்பு விமர்சையாக கொண்டாடப்படும் நான்காவது இலக்கி விழா என்பது இன்னும் மகிழ்ச்சிக்குரிய விடயமாகும்.இலக்கியம் என்பது ஒரு அற்புதமான விடயமாகும் ஒரு மொழியின் வளர்ச்சியில் ஒரு சமூகத்தின் காலாச்சார பாரம்பரியத்தில் இலக்கியம் முக்கிய பங்காற்றுகின்றது. ஒரு இலக்கியத்தின் சுவை அதன் தத்துவார்த்தங்கள் அதன் உள்ளடக்கங்கள்தான் ஒரு மொழியின் பாரிய வீச்சுக்கும் உறுதிப்பாட்டிற்கும் துணைபுரிகின்றது. தமிழ் இலக்கிமானது பாரம்பரிய தொன்மை மிக்க ஓர் இலக்கியமாகும் இதற்கு பல சிறப்பம்சங்களும், விசேட இயல்புகளும் காணப்படுகின்றமை தமிழ் மொழியின் மேன்மையை சுட்டிக்காட்டுகின்றது.
ஆதி மொழியான தமிழ் மொழி இன்றும் அதன் சிறப்பு கெடாமல் அதன் தொன்மையோடு விளங்குகின்றது என்றால் அதற்கு தமிழ் இலக்கியம் பாரிய பங்காற்றுகின்றது. தமிழ் இலக்கியத்தின் வளர்ச்சியில் பல சான்றோர்கள் புலவர்கள் இலக்கியப்பற்றாளர்கள் பாரிய பங்காற்றியிருக்கின்றார்கள். தமிழ் இலக்கியம் உள்ளவரை அதன் வளர்ச்சிக்கு தொண்டாற்றியவர்கள் என்றும் நினைவு கூறப்படுவார்கள் என்பதில் ஐயமில்லை.
துரதிஸ்ட்டவசமாக இன்று மாணவர் சமூகத்திடமும் இளைய தலைமுறையிடமும். இலக்கியம் பற்றிய ஆர்வம் மங்கி வருகின்றது. பிற மொழிகளில் காட்டும் ஆர்வம் தாய் மொழியான தமிழ் மொழி இலக்கியத்தில் காட்டப்படாமை வேதனைக்குரிய விடையமே. இருந்த போதிலும் இவ்வாறான இலக்கிய நிகழ்வுகள் மூலம் இலக்கியத்தின் தொன்மை அதன் பாரம்பரியம் அதன் மேன்மை இளைய சமூகத்திடமும் தாவிச் செல்கின்றது இது பாராட்டப்படவேண்டிய வளர்க்க வேண்டிய ஒரு விடயம்.
இலக்கிய சங்கங்கள் இலக்கிய நிகழ்வுகள் பாடசாலைகள் தோறும் நடாத்தப்பட வேண்டும். மாணவர்களுக்கு இலக்கியத்தின்பால் ஆர்வத்தினையும் அதன் மகத்துவத்தினையும் உணர்த்த வேண்டும், இதற்கு கிழக்கு மாகாண கல்வி அமைச்சும், மாகாண கல்வித் திணைக்களமும் காத்திரமான பங்காற்றுகின்றது என்பதை நான் நன்கு அறிவேன். இதற்கான முழுமையான ஒத்துளைப்பினையும் உதவியினையும் முதலமைச்சர் என்ற வகையில் என்னால் வழங்கப்படும் என்பதை உறுதிப்படுத்துகின்றேன்.

“வாழ்க தமிழ் மொழி,
வளர்க தமிழ் இலக்கியம்,
ஓங்குக அதன் புகழ் அகிலமெல்லாம்”
வளர்க தமிழ் இலக்கியம்,
ஓங்குக அதன் புகழ் அகிலமெல்லாம்”
0 commentaires :
Post a Comment