10/25/2010

அமெரிக்க ஜனாதிபதியின் இந்திய விஜயத்தை முன்னிட்டு பாதுகாப்பு தீவிரம்

அமெரிக்க அதிபர் ஒபாமாவின் வருகை க்காக மும்பையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. ஒட்டுமொத்த தாஜ்மகால் ஹோட்டலும் முன்பதிவு செய்யப்பட்டுள்ளது.
அமெரிக்க அதிபராக ஒபாமா, கடந்த ஆண்டு ஜனவரி 20ந் திகதி பதவி ஏற்ற பின்னர் முதன் முதலாக இந்திய சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார். பிரதமர் மன்மோகன் சிங்குடன் அவர் நெருக்கமான நல்லுறவு வைத்திருப்பதால் அவரது இந்திய பயணம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்திய சுற்றுப்பயணத்தின்போது நிதித் தலைநகரமான மும்பைக்கும் அதிபர் ஒபாமா வருகிறார். வரும் 6ந் திகதி (சனிக்கிழமை) மும்பைக்கு வரும் ஒபாமாவுக்காக பாதுகாப்பு பலப்படுத்தப் பட்டுள்ளது. இது தொடர்பாக மூத்த பொலிஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
அமெரிக்க அதிபர் ஒபாமா, ஏர் போர்ஸ் ஒன் விமானம் மூலம் மும்பை வந்திறங்குகிறார். அந்த விமானத்துக்கு இருபுறமும் இரு விமானங்கள் பாதுகா ப்புக்காக வருகின்றன.
மும்பை விமான நிலையத்தில் இறங்குகிற அதிபர் ஒபாமா, குண்டு துளைக்காத வகையில் நான்கரை அங்குல தகடுகளால் மூடப்பட்டுள்ள லிங்கன் கான்டினென்டல் காரில் சரித்திரப்பிரசித்தி பெற்ற தாஜ்மகால் ஹோட்டலுக்கு வருகிறார். இதற்காக ஒட்டுமொத்த தாஜ்மகால் ஹோட்டலும் முன் பதிவு செய்யப்பட்டுள்ளது.
எனவே விமான நிலையத்திலிருந்து இந்த ஹோட்டல் வரையிலான வழி முழுவதும் பலத்த பாதுகாப்பு வலயத்தின் கீழ் கொண்டு வரப்படும்.
அந்த நேரத்தில் மேற்கு அதிவிரைவு சாலையில் பிற வாகன போக்குவரத்துக்கு தடை விதிக்கப்படும்.
ஒபாமாவின் தனிப்பட்ட பாதுகாப்பு படையே மிகப் பெரியதாகும். இந்தப்படை ஏற்கனவே மும்பையில் தனது பாதுகாப்பு பணிகளை தொடங்கிவிட்டது.
இரகசிய ஒற்றர் படைப் பிரிவும் இதற்கென விசேடமாக அமைக்கப்பட்டு ள்ளது. இந்தியாவரும் அமெரிக்க ஜனாதிபதி ஐந்து நாட்கள் இங்கு தங்கியிருப்பார் என்றும் பொலிஸ் அதிகாரி தெரிவித்தார்.


0 commentaires :

Post a Comment