தேர்தல் முறை மாற்றம், உள்ளூராட்சி மன்றத்தேர்தல்கள் மற்றும் தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் மீள்குடியேற்ற அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பாக பிரதியமைச்சர் முரளிதரனிடம் வினவியபோது, அவர் தெரிவித்த கருத்துக்கள் இங்கு தொகுத்து தரப்பட்டுள்ளன.
30 வருடங்களுக்குப் பின்னர் சகல இன மக்களும் ஒன்றிணைந்து வாழும் சந்தர்ப்பம் கிடைத்திருக்கிறது. வடபகுதி மக்கள் எவ்வித பிரச்சினைகளும் இன்றி நாட்டின் அனைத்து பகுதிகளுக்கும் சுதந்திரமாக சென்று வருகிறார்கள். பாடசாலை மாணவர்கள் சகல பகுதிகளுக்கும் சுற்றுலா செல்கிறார்கள். சிங்கள மக்களும், யாழ்ப்பாணம், திருகோணமலை, மட்டக்களப்பு என பல இட ங்களுக்கும் எதுவித பிரச்சினை களும் இல்லாமல் சென்று வருகிறார்கள்.
மீள்குடியேற்ற பிரதியமைச்சராக இருக்கிaர்கள். மீள்குடியேற்ற நடவடிக்கைகள் எப்படியிருக்கின்றன?
கிழக்கு மாகாணத்தைப் பொறுத்தவரையில் மீள்குடியேற்றப் பணிகள் முடிவடைந்துள்ளன. மூதூர் பகுதியில் 1200 குடும்பங்கள் குடியமர்த்தப்படவுள்ளன. உண்மையில் அது மீள்குடி யேற்றமல்ல, இடமாற்றம் rலீloணீation என்றே கூறவேண்டும். சம்பூர் பகுதியிலுள்ள 4 கிராம சேவையாளர் பிரிவுகள் அரசாங்கத்தின் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக எடுக்கப்பட்டிருக்கிறது. அப்பகுதி மக்களை வேறு ஒரு இடத்தில் குடியமர்த்துவதற்கான வேலைகள் நடந்து கெண்டிருக்கின்றது. வீடுகளை நிர்மாணிப்பதற்கான திட்டங்கள் பூர்த்தியடையும் நிலையில் இருக்கின்றன. அது தவிர கிழக்கு மாகாணத்தில் எதுவித பிரச்சினைகளும் இல்லை.
வட மாகாணத்தில் மெனிக் பாம் முகாமில் 24 ஆயிரம் பேர் இருக்கிறார்கள். 1 இலட்சத்து 60 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் மீளக்குடியமர்த்தப்பட்டுள்ளனர். மீள்குடியேற்றம் என்று சொல் லும்போது, 64 ஆயிரம் மக்கள் யாழ்ப்பாணத்தில் இருக்கிறார்கள். உயர் பாதுகாப்பு வலயத்திலிருந்து 20 வருட காலமாக வெளி யேறியவர்களே இவர்கள். புத்தளத்தில் 67 ஆயிரம் முஸ்லிம் மக்கள் இருக்கிறார்கள். அவர்களும் வெளியேறி 20 வருடங்களுக்கு மேலாக வாழ்ந்து வருபவர்கள். வன்னியிலிருந்து இடம்பெயர்ந்து வந்த 24 ஆயிரம் மக்கள் இன் னும் நான்கு மாத காலப்பகுதிக்குள் மீளக்குடியமர்த்தப்பட்டு விடுவார்கள். புதுக்குடியிருப்பு பகுதிகளில் நிலக்கண்ணிவெடிகளை அகற்றும் பணிகள் தொடர்ந்து மேற் கொள்ளப்பட்டு வருவதால், மக்களை மீளக்குடியமர்த்தும் பணி படிப்படியாக முன்னெ டுக்கப்படுகிறது.
இந்திய அரசாங்கம் 50,000 வீடுகளை நிர்மாணித்து கொடுக்க வுள்ளது. கிளிநொச்சியில் நேர்ப் திட்டத்தின் உதவியுடன் 5000 வீடுகள் கட்டப்பட்டு வரு கின்றன. அவர்களின் வாழ் வாதாரத் திற்கான ஆரம்ப உதவிகள், சுயதொழில் வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொள்வதற்கான பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. அப்பகுதிகளிலுள்ள வளங் களைப் பயன்படுத்தி மக்கள் தமது பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான உதவிகள் செய்யப்படுகின்றன.
வளங்களை பெற்றுக்கொடு ப்பதை விட தடைகளை எடுத்து விட் டால் மக்கள் தானாகவே வாழ்க்கையில் முன்னேறி விடுவார்கள். ஒருநாள் இரவு வேளை முல்லைத்தீவு பகுதிக்குச் சென்றிருந்தோம். கடல் பகுதியில் மீனவர் படகுகளில் ஒளிவிளக்குகள் எரிந்து கொண் டிருந்ததை பார்த்தோம். மீனவர்கள் கடல் தொழில் செய்ய ஆரம்பித்து விட்டார்கள் என நினைத்துக் கொண்டே அங்கிருந்த மக்களிடம் பேச்சுக் கொடுத்தபோது, அவர்கள் இதெல்லாம் எங்கள் படகுகள் இல்லை. திருகோணமலையிலிருந்து இங்கு வந்து மீன்பிடிக்கிறார்கள் என்றனர். அப்போதே மீன்பிடித்துறை அமைச்சு, கடற்படை அதி காரிகளுடன் தொடர்பு கொண்டு முல்லைத்தீவு பகுதி மீனவர்களை மீன்பிடிக்க அனுமதிக்குமாறு கேட்டுக்கொண்டதற்கிணங்க, அவர்கள் தற்போது மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் மிகவும் மகிழ்ச்சியுடன் தொழில் புரிகிறார்கள்.
மீனவர்கள் தங்கள் தொழிலைச் செய்ய இரவு பகல் எந்நேரத்திலும் அனுமதியளிக்கப்பட்டிருக்கிறது. சுதந்திரமாக தங்கள் தொழிலைச் செய்து வருகின்றனர். எந்தவொரு தடையும் இல்லை. படையினரும் இவ்விடயத்தில் நன்கு ஒத்து ழைக்கின்றனர்.
எவரும் குற்றங்களையும், குறைகளையும் சொல்லலாம். நாட்டில் 30 வருடங்களாக நிலவிய பிரச்சினையை ஒரே இரவில் தீர்த்துவிட முடியாது. இரண்டு வருடங்களுக்கு முன்னர் இருந்த மட்டக்களப்பை இப்போது பார்க்க முடியாது. அன்றிருந்த நிலைமைகள் இன்றில்லை. அப்போது வீதிகள் குண்டும் குழியுமாக காணப்பட்டன. இப்போது வீதிகள் செப்பனிடப்பட்டு அழகாக காட்சி தருகின்றன. பொருளாதார ரீதியிலும் முன்னேற்றம் கண்டு வருகிறது. எனவே மக்கள் பொறுமையாக இருக்க வேண்டும். குறை கூறும் அரசியல்வாதிகளை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். வன்னியைப் பொறுத்த வரையில் இன்னும் இரண்டு ஆண்டுகளில் பாரிய மாற்றம் ஏற்படும். வாழ்க்கையில் நினைத்துக்கூட பார்க்க முடியாதிருந்த கிளிநொச்சி, முல்லைத்தீவு பகுதி மக்களுக்கு தற்போது மின் இணைப்பு கிடைத்திருக்கிறது.
தேர்தல் முறை மாற்றம் தொடர்பாக தற்போது பேசப்பட்டு வருகிறது. இவ்விடயத்தில் உங்களது கருத்தென்ன?
உத்தேச தேர்தல் முறை மாற் றத்தில் விகிதாசார வட்டார முறை யிலான தேர்தல்கள் அறிமுகப் படுத்தப்படவிருக்கிறது. என்னைப் பொறுத்தவரையில் இவை இரண்டும் நல்லதாகவே தெரிகிறது.
விகிதாசாரத்தில் சிறுபான்மை மக்களுக்கு வாய்ப்பிருக்கிறது. சிறுபான்மை என்பதை விட சிறு கட்சிகளுக்கு வாய்ப்பிருக்கிறது. இதனால் நிறைய கட்சிகள் போட்டியிடலாம். ஆனால் அதில் ஒரு பிரயோசனமும் இருக்காது. தொகுதிவாரி என வரும்போது தொகுதிக்கு ஒருவர் தேர்ந்தெடுக்கப் படுவார். விகிதாசார தேர்தலில் விருப்பு வாக்குகளை பெற்றுக் கொள்வதற்காக பெருந்தொகைப் பணத்தை செலவிடுவது, வேட் பாளரிடையே வாக்கு வேட்டை யின்போது ஏற்படும் மோதல்கள், மக்கள் ஏமாற்றமடையமாட்டார்கள், பெருந்தொகை பணம் விரயமாவதை கட்டுப்படுத்தக்கூடியதாக இருக்கும்.
இந்த தேர்தல் முறைகளால் சிறுபான்மை மக்களுக்கு ஏதேனும் பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பிருக்கிறதா?.
சிறுபான்மை மக்களுக்கு எந்தவித பாதிப்பும் வராது. சிறு கட்சிகளுக்கே பாதிப்பு ஏற்படும். அம்பாறை மாவட்டத்தை எடுத்துக்கொண்டால், (த.தே.கூ.) கட்சி ரீதியில் ஒருவர் போட்டியிட்டதால் சிறு தொகை வாக்குகளைப் பெற்றிருப்பினும், தேர்தலில் வெற்றி பெறுகிறார். ஆனால் அதனை விட பெரும் எண்ணிக்கையான வாக்குகளைப் பெற்ற இன்னொரு கட்சியைச் சேர்ந்தவர் தோற்று விடுகிறார். இரண்டாயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் ஒரு கட்சியைச் சேர்ந்த மூவர் தெரிவாகி விடுகின்றனர். தொகுதியும் வட்டாரமும் வரும் என்றால் ஒரு பிரச்சினையும் ஏற்படுவதற்கு வாய்ப்பில்லை.
உங்களது எதிர்கால அரசியல் நடவடிக்கைகள் பற்றி கூறுவீர்களா?
கிழக்கு மாகாண மக்களை எடுத்துக்கொண்டால் இரண்டு வருடங்களுக்கு முன் இந்த அரசாங்கத்தின் மீது ஒரு சந்தேகம் இருந்தது. எதிர்காலத்திட்டங்கள் தொடர்பாக தெளிவாகக் கூறியபோதிலும் மக்கள் வாக்களிக்கவில்லை. உன்னிச்சைக்குளத்து நீரை குடிநீருக்கு உகந்ததாக மாற்றி வழங்கும் திட்டம்பற்றி நாம் மக்களிடம் எடுத்துக்கூறியபோது, அப்போது அதனை அவர்கள் நம்பவில்லை. 10 ஆயிரம் மில்லியன் ரூபா செலவில் அத்திட்டம் தற்போது நிறைவடையும் தருவாயில் இருக்கிறது. இப்போதுதான் அந்த மக்களுக்கு புரிகிறது. தற்போது ஜனாதிபதி மீது மக்கள் மத்தியில் நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது. அவரால் எதையும் செய்ய முடியும் என நம்புகிறார்கள். இதுபோன்று வடபகுதி மக்களும் நம்பிக்கையுடன் இருக்க வேண்டும். இனிவரும் எமது சமூகம் நன்றாக இருக்க வேண்டும்.
கிழக்கு மாகாணம் எவ்வாறு இன்று அபிவிருத்தி கண்டு கொண்டிருக்கிறதோ, அதேபோன்று வடக்கில் வன்னிப் பகுதியும் அபிவிருத்தியைக் காணும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை
தினகரன் வாரமஞ்சரி
0 commentaires :
Post a Comment