10/23/2010

உள்ளுராட்சி சபைகள் திருத்தச் சட்டமூலம் மீதான முதலமைச்சரின் உரை

img_7216 உள்ளுராட்சி சபைகள் திருத்தச் சட்டமூலம் கிழக்கு மாகாண சபையின் அபிப்பிராயத்தைப் பெற்று அங்கீகரிப்பதற்காக  முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களால் சமர்ப்பிக்கப்பட்டது. இதன் போது முதலமைச்சர் ஆற்றிய உரையின் முழுப்பகுதி. 
கௌரவ தவிசாளர் அவர்களே! ஏனைய உறுப்பினர்களே! பாராளுமன்றத்தினால் அனுப்பப்பட்டு அங்கீகாரம் கேட்டு நிற்கின்ற  உள்ளுராட்சிமன்ற தேர்தல்கள் திருத்தச் சட்டமூலம், உள்ளுராட்சி அதிகார சபைகள் விசேட ஏற்பாடுகள் சட்மூலம்  என்ற இரண்டு சட்டமூலங்களுக்கு அங்கீகாரம் கேட்டு நிற்கின்றோம.; இந்த விடயத்திலே கடந்த ஆண்டு; உள்ளுராட்சி சபைகள் திருத்த சட்டமூலம் எமக்கு அனுப்பப்பட்டு அங்கிகாரத்திற்காக வந்திருந்தது. அதில் பெரும் வாத பிரதிவாதங்கள்; இடம்பெற்று, பல ஆலோசனைகளுடன் திருப்பி அனுப்பப்பட்டு இன்று மீண்டும் அச்சட்டமூலம் அங்கீகாரத்திற்றகாக அனுப்பப்பட்டிருக்கிறது. அந்த அடிப்படையில் பார்க்கின்ற போது நாங்கள் கடந்த ஆண்டு முன்வைத்த விடயம,; இலங்கையிலே வாழ்கின்ற சிறுபான்மை மக்களுக்கு விகிதாசார அடிப்படையில் பிரதிநிதித்துவங்கள் வழங்கப்பட வேண்டும். அதில் வடக்கு கிழக்கு அல்லது தமிழர்கள் அல்லது ஏனைய சிறுபான்மையினர் செறிவாக வாழ்கின்ற இடங்கள் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களுக்கு பிறமுறைகளில் பிரதிநிதித்துவம் வழங்கப்பட்டால் பரவாயில்லை  என நாங்கள் பெரும்பாலானவர்கள் குறிப்பிட்டிருந்தோம.; அவ் அடிப்படையில் அந்த திருத்தத்தை அரசு செய்திருக்கின்றது, அதைவிட 70 வீத வட்டார முறையினையும் 30 வீத விகிதாசார தெரிவு முறையினையும் கொண்டிருக்கின்றது. அதில் இனங்கள் பிணைந்து வாழ்கின்ற இடங்களில் நேரடியாக எங்களால் கொடுக்கக்கூடடிய ஏற்பாட்டினை எமக்கு செய்து கொடுக்கப்பட்டிருக்கின்றது. அது போன்று நல்ல விடயமாக தேர்தலில் போடடியிடுகின்றவர்களில் பெண்களும் இனைஞர்களும் 25 சதவீதத்திற்கு குறைவில்லாமல் கட்டாயம் இடம்பெற வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டிருக்கின்றது.
அது போன்று இவ் உள்ளுராட்சி வட்டார முறையில் தேர்தலில் போட்டியிடுகின்ற நபர்கள் தாங்கள் வேட்புமனு தாக்கல் செய்து 3 மாத காலத்திற்குள் தங்களது சொத்து விபரம் அனைத்தையும் சமர்ப்பிக்க வேண்டும் என்கின்ற மிக நல்ல விடயமும் இங்கு குறிப்பிடப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது.; மேலும் ஏதேனும் அரசியல் கட்சியோ அல்லது சுயேற்சைக்குழுக்களோ தாம் வட்டார முறையில் கட்டுப்பணங்களை செலுத்துகின்ற போது ஒரு அரசியல் கட்சி ஒவ்வொரு வட்டாரத்திற்குமான கட்டுப்பணமாக ரூபா 5000ம் செலுத்தப்படவேண்டும். அதே வேளை சுயேற்சைக்குழுவாக போட்டியிடுகின்றவர்கள் தமிழில் வருகின்றபோது 10000 ரூபா என்றும் சிங்கள மொழியில் வருகின்ற போது 20000ரூபா எனவும் மாற்றப்பட்டிருக்கின்றது. நான் நினைக்கின்றேன் சிங்கள மொழிதான் இதற்கான மூலம். எனவே அப்பணம் நிச்சயமாக 20000ரூபாவாகத்தான் இருக்கும். இந்த விடயமும் மிக வரவேற்கத்தக்கது. ஏனெனில் கடந்த தேர்தலிலே அதிகளவிலான சுயேற்சைக்குழுக்கள் போட்டியிட்டதன் காரணமாக பிரதான கட்சியின் வாக்குகள் பிரிவடைந்தமை குறிப்பிடத்தக்கது. பலதரப்பிட்ட பிரச்சினைகளை நாம் சந்தித்திருக்கின்றோம். அது இம்முறை மட்டுப்படுத்தப்பட்டிருக்கின்றமை வட்டார முறையிலான தேர்தலிலே  மக்களுக்கு குழப்பமில்லாமல் வாக்களிக்கக்கூடிய முறையில் தேர்தல் முறையினை கொண்டிருப்பதனால் நாம் அதனை வரவேற்கவேண்டும். வட்டாரத்திலே 5 வீதத்திற்கும் குறைவான வாக்குகளைப் பெறுகின்றவர்கள் கட்டுப்பணத்தினை இழக்கின்ற நிலை உள்ளதால் இருபதாயிரம் ரூபா கட்டுப்பணத்தினை செலுத்தி கட்டுப்பணித்தினை இழக்க விரும்பாமல் கடந்த காலங்களை போல மக்களை குழப்புகின்ற வகையில் பலதரப்பட் சின்னங்கள் சீப்பு. அப்பிள், போத்தல், துவிச்சக்கரவண்டி  போன்ற பல சின்னங்கள் இடம்பெறுவது குறைவடையும் என்பதால் மக்கள் குழப்பம் இல்லாத முறையில் வாக்களிக்கூடிய நிலை காணப்படும்..
அதே போன்று கடந்த காலங்களை போன்று ஒரு வட்டாரத்திலே ஒரு அரசியல் கட்சி அல்லது ஒரு சுயேற்சைகுழு வெற்றி பெற்றால் கடந்த காலத்தை போல அங்கு வெற்றிடங்கள் ஏற்படுகின்ற போது அவ்விடத்திற்கு வேறொரு நபரை நியமிக்கும் அதிகாரம் அரசியல் கட்சிக்கும் சுயேற்சைக் குழு தலைவருக்குத்தான் அளிக்கப்பட்டிருக்கின்றமையும் ஓர் நல்ல விடயமாகும். ஆகையால் கடந்த காலங்களில்  திருத்தங்களை செய்து தாருங்கள் என்று கேட்டிருந்த போது அதை ஏற்றுக்கொண்டு பல திருத்தங்களை செய்து கொடுத்திருந்தோம். மீண்டும் அதனைத் திருத்தி எமது மாகாணத்தின் அங்கீகாரத்திற்காக அனுப்பியிருக்கின்றார்கள். ஆகையால் இத்திருத்த சட்டமூலத்திற்கு நாம் அனைவரும் அங்கீகாரம் வழங்க வேண்டும் என நான் இவ்விடத்தில் கேட்டுக்கொள்கின்றேன்.
அது மாத்திரமல்ல நம் அனைவருக்கும் தெரியும். ஒரு நாட்டின் தேர்தல் முறையினை மாற்றுகின்ற விடயத்தில் உண்மையிலேயே மாகாண சபைக்கு சட்ட ரீதியான அதிகாரம் வழங்கப்படவில்லை. ஆனால் மாகாண சபைகள் இந்த நாட்டிலே ஏற்படுததப்பட்டிருந்த பொழுது மிகக் குறைந்த அதிகார பகிர்வு முறையில் தான் வழங்கப்பட்டிருக்கின்றது. அது உண்மையில்  அனைவருக்கும் தெரிந்த விடயம். வடக்கு கிழக்கிற்கு வழங்கப்படடிருக்கின்றது. ஏனைய மாகாணத்திற்கும் வழங்கப்படிருக்கின்றது. நாம் நீண்ட கால இடைவெளிக்கு பின்னர் பெற்றுக்கொண்டவர்கள் என்ற அடிப்படையில் நாங்கள் அனைவரும் பேசுகினற விடயம் ஆழும் கட்சி, எதிர் கட்சி என்ற வேறுபாடுகள் இல்லாமல் கிழக்கு மாகாண சபை வலுவாக்கப்பட்ட ஒரு அதிகாரமுள்ள சபையாக்க வேண்டும.; அதை பெற்றுக் கொள்ள முயற்சிக்கின்றோம். இருந்தும் மாகாண சபைக்கு 100 வீதம் வழங்கப்பட்டிருக்கின்ற உள்ளுராட்சி அதிகாரங்களை சட்ட திருத்தத்தின் ஊடாக மீள பெற்றுக் கொள்ள வேண்டும் என்பதை எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாத நிலையில் நாம் இன்று உள்ளோம். அதில் மிக முக்கியமான விடயம் அனைவருக்கும் தெரிந்த விடயம் எமது மாகாணத்தில் மூன்று இனத்தினரும் மிக சந்தோசமாக வாழ்கின்றோம். இன்று மாகாணத்தில் இரண்டு மொழிகளை பேசுகின்றார்கள் அச்சமற்ற சூழ்நிலையில் வாழ்கின்றார்கள். ஆனால் திட்டமிட்டு தூரநோக்கு அடிப்படையில் மாகாண சபை முறைமை இல்லாதொழிக்க வேண்டும் என்ற அடிப்படையில் சில விடயங்கள் நடந்துகொண்டுதான் இருக்கின்றது. அதனை மறுப்பதற்கில்லை. அப்படி பார்க்கின் போது கடந்த நாடாளுமன்ற தேர்தலிலே பலதரப்பட்ட  இறக்குமதி செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் உருவாகியிருக்கின்றார்கள். இவர்களுக்கு எப்போதுமே கிழக்கு மாகாண சபையில் இருப்பதற்கோ? அல்லது மாகாண சபைகள் முறைமையோ? அல்லது அதிகார பகிர்வுகள்; உண்மையிலேயே அவர்களுக்கு தேவையில்லை. அம்பாறையிலே திருகோணமலையிலேயே இருப்பதை அனைவரும் காண்பீர்கள்.
அந்த அடிப்படையில் பார்க்கின்ற போது இதே மாதிரியான பிரச்சினை எதிர்காலத்திலே எங்களது மாகாணத்திலே இந்த வட்டார முறைமைகள் வருகின்ற போது நடைபெறக்கூடாது என்பதில் கிழக்கு மாகண சபை மிக விழிப்பாக இருக்கவேண்டும.; இதை மத்திய அரசிற்கும் பாராளுமன்றத்திற்கும் தெரிவிக்க வேண்டும். முதலமைச்சர் என்ற அடிப்படையிலும் ஒரு பொறுப்புமிக்க கட்சியை வைத்து வழி நடாத்துகின்றவன் என்ற அடிப்படையிலும் எங்களுக்கு பொறுப்புடைய விடயமாக நான் இதனை பார்க்கின்றேன். அந்த அடிப்படையில் வட்டார முறைமையிலே தேசிய எல்லை நிர்ணயக் குழு என்கின்றபோது அதை அமைச்சர் அவர்கள்தான் உருவாக்குவதாக இருக்கின்றது. தேசிய மட்டத்திலான நிர்ணயக்குழு அந்த குழுவில் ஐந்து பேர் அங்கம்; வகிக்கின்ற போது அதில் பிரதிநிதித்துவம் சிறுபான்மை மக்களுக்கும் வழங்கப்பட வேண்டும.; என்பதை நாங்கள் வலியுறுத்த வேண்டும.; ஏனென்றால் அது ஒரு விசேட ஆணைக்குழுவென்றால் ஜனாதிபதியினால் நேரடியாக நிர்ணயிக்கப்படும.; ஆனால் இது குழு நியமனம் என்ற அடிப்படையில் அமைச்சரினால் நிர்ணயிக்கப்படுவதனால் அதில் எங்களது அக்கறையும் பார்வையும் செலுத்தப்பட வேண்டியதாக இருக்கின்றது.
அNது போன்று மாவட்ட எல்லை நிர்ணயக் குழுக்களாக பார்க்கின்போது மாவட்ட அரச அதிபர், தேர்தல் திணைக்கள பிரதிநிதி, நில அளவையாளர் பிரதிநிதி, புள்ளிவிபரத் திணைக்கள பிரதிநிதி, மத்திய அரசினால் நியமிக்கப்படும் பொது சேவையாளர் ஒருவர், மாகாண சபையில் உள்ளுராட்சி சபைக்கு ஒருவர் இவர்கள்தான் மாவட்ட எல்லை நிர்ணயங்களை செய்யக்கூடியவர்கள். இதில் நாம் கவனமாக இருக்க வேண்டிய விடயம் என்னவென்றால், மத்திய அரசினால் ஒரு குழு நியமிக்கப்படுகின்ற போது மாகாண மட்டத்திலும் இரண்டுபேரும் ஒருமுகப்படுத்தப்பட தீர்மானங்களை மேற்கொண்டால் மாகாணத்தில் இருக்கின்ற அரசியல்வாதிகளோ ஏனையவர்களோ தலையிட முடியாத நிலை ஏற்படும். இங்கு நாம் இன ரீதியாக பேசாவிட்டாலும் கடந்த காலங்களில் கற்றுக் கொண்ட அனுபவங்களை மனதில்இட்டு கடந்த காலங்களில் எப்படி வழங்கப்பட்ட அதிகாரங்கள் எமக்குத் தெரியாமல் திட்டமிட்டு பறிக்கப்பட்டு, அதற்கு எதிராக பேசிய தலைவர்கள் இன்று எத்தனை பேர் இருக்கின்றார்கள். எத்தனை தலைவர்கள் இல்லாமல் இருக்கின்றார்கள். என்ற விடயங்கள் நம் அனுபவத்தின் ஊடாக பார்க்கின்றபோது, தற்போது நாம் அம்பாறை மாவட்டத்தினை எடுத்துப்பார்த்தால், மாவட்ட அரச அதிபர், தேர்தல் திணைக்கள பிரதிநிதி, நில அளவையாளர் பிரதிநிதி, புள்ளிவிபர திணைக்கள பிரதிநிதி, மத்திய அரசினால் நியமிக்கப்படும் மத்திய பயனடை சேவையாளர் ஒருவர், மாகாண சபையில் பிரதிநிதியாக இருக்கின்ற ஒருவர் மட்டும்தான் அங்கு இருக்கின்ற சிறுபான்மை மக்களை திருப்தி படுத்துபவர்களாக இருக்கின்றது. ஆகவே இந் விடயத்தில்தான் நாம் வழங்குகின்ற ஆலோசனைகள் திருத்தமாக மேற்கொள்கின்ற விடயமாக நிச்சமாக மாகாண மட்டத்திலாவது இவ் மத்திய அரசினால் நியமிக்கப்படுகின்ற பொது சேவை ஆணையார் மாகாண சபையினால் நியமிக்கப்படுகின்ற பொது சேவை ஆணையாளராக குறிக்கப்பட்டிருக்கின்ற இடங்களை பிரதிநிதித்துவபடுத்துகின்றவர்கள் நியமிக்கப்படுகின்றபோது அதில் கிழக்கு மாகாணத்திற்கும் கூடுதல் பங்கும் இருக்கும் என்றுநான் நம்புகின்றேன்.
இச்சட்டத்தின் மிக முக்கியமான விடயம் இச்சட்டத்தின் மிக முக்கியமான ஏதேனும் ஒரு உள்ளுராட்சிமன்றத்தின் முதல் தடவையாக பாதீடு அல்லது குறை நிரப்பு பாதீடு தோற்கடிக்கப்பட்டால், அம்மன்றத்தின் தலைவர் பதவி இரத்துச் செய்யப்படுவதாக கருதப்படுகின்றது. அத்தலைவரானவர் இரண்டு முறை தோற்கின்ற போது இயல்பாகவே அச்சபைக்கு விசேட ஆணையாளரை நியமிக்கின்ற அதிகாரம்  அமைச்சருக்கே வழங்கப்படுகின்றமை குறிப்பிடப்பட்டிருக்கின்றது. இவ்வியடம் உங்கள் அனைவருக்கும் தெரியும்.  உள்ளுராட்சி மன்ற சட்ட மூலத்திலே சில உள்ளுராட்சிமன்றங்கள் விடுகின்ற தவறுகளை விசாரிக்கின்ற அதிகாரம் மாகாண சபைக்கு அதை இல்லாமல்செய்கின்ற அல்லது விசாரிக்கிக்ன்ற தன்மை இருந்தது. தற்போது இருக்கின்ற சூழலிலே அது தொடர்பான முழு அதிகாரமும் மத்திய அமைச்சருக்கே உரியது. அது மாத்திரமல்ல மத்தியில் இருந்து அமைச்சர் இந்த விடயத்திற்கு கட்டளையிடுகின்ற போது அங்கிருந்து நியமிக்கப்படுகின்றவர் யார்? எத்தகையவர்? என்ற பிரச்சினையினை தோற்றுவிக்கும். அவ் அடிப்படையிலே மாகாண உள்ளுராட்சி அமைச்சர் என்கின்ற ஒரு திருத்தம் கொண்டுவரப்படுகின்போது இங்கு இருக்கின்ற ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள மாகாண அதிகாரங்காரத்தை நாங்கள் பாதுகாத்துக்கொள்ள முடியும்.
இங்கு குறிப்பட்டுள்ள அமைச்சர் என்கின்ற விடயத்தினை மாகாணஅமைச்சர் என்கின்ற ஒரு மாற்றத்தை நாங்கள் கோர வேண்டித்தான் இருக்கின்றது.
ஆகையால் இந்த சட்ட மூலத்தினை ஏனைய மாகாணங்கள் எல்லாம் உடனடியாக ஆதரித்து அனுப்பியிருக்கின்றது. ஏனென்றால் நாட்டில் அனைத்து மாகாணங்களிலும் பிரச்சினையில்லை அம்மாகாணங்களில் இருக்கினற் பிரதான எதிர்காட்சியான ஐக்கிய தேசிய கட்சி கூட ஆதரித்து இருக்கின்றது. ஆகையால் எமது மாகாணத்திற்குதான் அதிகார பகிர்வினை பாதுகாக்கின்ற பொறுப்பினை இயற்கை ஒப்படைத்திருக்கின்றது. அவ்வடிப்படையில் நாம் பலதரப்பட்ட விவாதங்களோடு மத்திய அரசிற்கு இதனை தெளிவுபடுத்த வேண்டிய பொறுப்பு இருக்கின்றது. அவ் அடிப்படையில் உங்களது ஆலோசனைகளை மிக தெளிவாகவும் உங்களது ஆலோசனையுடன் சேர்த்து இச்சட்மூலத்தை ஆதரிக்க வேண்டிய பொறுப்பும் ஏற்பட்டிருக்கின்றது. அதிலும் ஓர் விசேட பிரச்சினையாக நாம் கருதும் விடயம் என்னவென்றால், கட்சிகளை சார்ந்த பிரதிநிதிகள் பாராளுமன்றத்திலும் இருக்கின்றார்கள். எங்களது கட்சியினை தவிர்ந்த ஏனைய கட்சிகளின் பிரதிநிதிகள் பாராளுமன்னறத்தில் பிரதிநிதித்துவம் இருக்கின்றது. அந்த பிரதிநிதித்துவம் உள்ளவர்கள் பாராளுமன்றத்தில்தான் இச்சட்டமூலத்தை அமுலாக்குகின்ற பொழுது மூன்றாவது வாசிப்பின்போது நாங்கள் இங்கு பேசுகின்ற விடயங்களை அப்பாராளுமன்றத்திலும் கட்சி உறுப்பினர்களிடம் எடுத்து கூறி நாம் இங்கு பேசுகின்ற விடயங்களை கட்சி கூட்டதிலே எடுத்துக்கூறி  இதனை கட்டாயமாக பேசுவதற்கான ஒரு வாய்ப்பினையும் அன்பான உறுப்பினர்கள் இதனை சேர்த்து கொள்வார்கள் என்று நம்புகின்றேன். இ;சட்டமூலத்திலே மிக நல்ல விடயங்களும் இருக்கின்றது. எங்களது மாகாணத்தில் இருந்து சில அதிகாரங்களை பறிக்கின்ற விடயங்களும் இருக்கின்றது. ஆகையால் இதை நாங்கள் மிக கவனமாக பார்க்க வேண்டியதாகவும் கடந்த காலங்களில் எதிர்த்தவர்களாக பலதரப்பட்ட பிரச்சினைகள் என்கின்றபோது ஒரு கட்சிக்குள் கூட்டாக கூட்டுப்பொறுப்பு இல்லாமல் இயங்கினோம் என்கின்ற பிரச்சினைகள் வந்திருந்தது. ஆகவே நாங்கள் இம்மாகணத்தை கட்டியெழுப்ப வேண்டுமாக இருந்தால் இயல்பு வாழ்கையினை தொடர்ந்து நீடிக்க வேண்டுமாக இருந்தால், மக்கள் எதிர்பார்க்கின்ற அபிவிருத்தியினை செய்து கொண்டு செல்ல வேண்டும். மக்களுக்கு அல்லது எதிர்கால சந்ததியினருக்கு இந்த மாகாண முறையினை பாதுகாத்து கொடுக்க வேண்டிய இரண்டுபட்ட ஒரு சிக்கலான கட்டத்தில் இருக்கின்றோம். அந்த அடிப்பiயில் எமது பிரச்சினைகளை சொல்லி இந்த எமது கௌரவ உறுப்பினர்கள் அனைவரும் இதற்கு அங்கீகாரம் வழங்க வேண்டும் எனவும் கேட்டுகொள்கின்றேன்.
அது மாத்திரமல்ல ஏனைய மாகாணங்கள் இதனை ஆதரிப்பதற்கு எந்தவிதமான பிரச்சினைகளும் இல்லை அதுமாத்திரம் அல்ல கவலையான விடயம் இன்னுமொரு சட்டமூலத்தை கொண்டுவந்து மாகாண சபை முறைமை தேவையில்லை என்று சொன்னால் கூட அதனை ஏற்றுக்கொண்டு அதற்கு 100 வீதம் அனுமதி கொடுக்கக்கூடிய சூழல்தான் ஏனைய ஏழு மாகாணங்களுக்கும் இருக்கின்றது. இந்த மாகாணத்தில் மாத்திரம்தான்; இச்சட்டமூலங்களை பரிசீலனை செய்து ஆதரிப்பதா? திருத்த வேண்டுமா? அல்லது நிராகரிக்க வேண்டுமா? என்கின் முடிவினை எடுக்க வேண்டிய நிலை இருக்கின்றது. ஆகையால் இம்மாகாணசபைக்கு இருக்கின்ற சந்தர்ப்பத்தை வெறுமனே நாம் ஏளனம்  செய்ய முடியாது. அத்தோடு நாம் இன்று ஒரு இக்கட்டான சூழ்நிலையில் இருக்கின்றோம். அதை விட இங்கு உறுப்பினர்கள் பேசியது போல கடந்த ஆண்டு நாம் இதே போன்றுதான் மிக விரைவாக திருத்தங்களை கோரியபோது அதை ஏற்றுக்கொண்டு திருத்தினார்கள். இவ் ஏற்பாடுகளை எழுதியவர்கள் எங்களது மாகாணத்திலே அரசியல் சம்மந்தமாக பேசுகிறபோது அல்லது சட்டமூலமாக வர்த்தமானி மூலம் அறிவித்தல் விடுவதற்கு மன்னர் இது தொடர்பில் பேசி இருக்க வேண்டும். அவ்வாறு முன் கூட்டியே தெளிவுபடுத்தியிருந்தால் எமக்கு பல சந்தேகங்கள் தீர்க்கப்பட்டிருக்கும் . இன்று பல சந்தேகங்கள் இருக்கின்றது. விளங்கமுடியாத விடயங்கள் இருக்கின்றது. தெளிவில்லாத விடயங்கள் இருக்கின்றது. ஆகவே இது ஒரு ஜனநாயக நாட்டிலே திடீரென்று எடுக்கப்படுகின்ற ஒரு வித்தியாசமான வன்முறையாக கூடத்தான் இதனை நான் கருதுகின்றேன் . ஆகையால் இது ஒரு நாட்டிலே இருக்கக்கூடாத விடயங்கள். ஒரு தேர்தல் முறையினை மாற்றம் செய்வதுதான் உண்iயிலேயே பிரச்சினை, ஆகையால் மறைமுகமாக அதிகாரங்கள் எடுக்கப்படுகின்ற விடயங்களை நாங்கள் அலசி ஆராய வேண்டும், எமது மக்களுக்கு பதில் கூறவேண்டும், எமது பகுதிகளில் இருக்கின்ற தலைவர்களுக்கு பதில் கூறக்கூடிய வகையில் எமக்கு விளக்கங்கள் வழங்கப்படவேண்டும். எந்தவொரு விளக்கமும் இல்லாமல் அவசர அவசரமாக செய்கின்ற விடயங்களை உண்மையிலேயே நான் ஒரு கட்சியினை வழிநடத்துகின்றவன் என்ற  அடிப்படையில் உண்மையிலேயே நான் வெறுக்கின்றேன். இது உண்மையிலேயே ஜனநாக பண்பில்லாமல் அவசர அவசரமாக கொண்டு வரப்பட்ட வீசிவிட்டு செல்கின்ற வேலைகள் இடம்பெறுமாக இருந்தால் இந்த நாட்டிலே இன்னும் சரியான ஜனநாக முறை நடைமுறையில் இல்லை என்பதைத்தான் இது காட்டுகின்றது. ஆகையால் இதில் பாராளுமன்றத்தில் இருக்கின்ற அங்கத்தவர்கள் நன்றாக சிந்திக்க வேண்டும். இது மோசமாக அவசரமாக செய்கின்ற விடயம் அல்ல. ஒரு பாமர மக்கள் கூட இதனை புரிந்து கொள்ளக்கூடிய வகையில் இது அமைய வேண்டும். எதிர்காலத்திலே வட்டார முறையிலே போட்டியிடுகின்ற ஒருகுடி மகன் சாதாரண விவசாயியாக அல்லது வர்த்கனாக கூட இருப்பான. அவன் அடிப்படை சட்டம் தெரியாமல் மோத முடியாது. ஆகையால் 3ம் நிலையில் இருக்கின்ற உள்ளுராட்சிமன்றங்கள் இரண்டாம் நிலையில் இருக்கின்ற மாகாண சபைகள் இதனை விளங்கிக் கொள்வதே கடினமாக இருக்கின்றமையினை முதலாம் நிலையில் இருக்கின்ற பாராளுமன்ற பிரதிநிதிகள் புரிந்து கொள்ள வேண்டும். இந்த நாட்டிலே பிரச்சினைகளை குறைப்பதற்கான வழிகளை ஏற்படுத்த வேண்டும். மாறாக இன்னமும் பேதங்கள் கட்சிகளுக்கு பின்னால் இழுபட்டு செல்கின்ற அல்லது அவர்களுக்கு பின்னால் செல்கின்ற அல்லது அவர்களது நிலைமைகளுக்கு ஏற்றாற்போல் போகின்ற வழிகளை இன்னமும் இந்ந நாட்டிலே செய்து கொண்டிருந்தால் இந்த நாட்டிலே  முன்னேற்றகரமான செயல்களை இன்னமும் செய்ய முடியாது. அவர்கள் தங்களுக்கு தேவையான விடயங்களை மாத்திரம் செய்து கொண்டு தாங்கள் மட்டும் சந்தோசமாக இருந்தால் மாத்திரம்  போதும் என்கின்ற அடிப்படையில் இலங்கையினுடைய ஒரு கட்சியாகவும் நோயாகவும்  மாறிவிடுவார்கள். இதனை நாம் ஏன் இவ்வளவு விளக்கமாக கூறவேண்டுமென்றால் உங்களு;களுக்கு தெரியும் இந்த மாகாண சபையினை உருவாக்குவதற்காக மிக மோசமான கடுமையான யுத்தம் செய்து, பாரிய உயிரிழப்புக்களை கொடுத்து, இராணுவ உயிரிழப்புக்களை கொடுத்து, மக்கள் கணிசமாக அழிந்து அதே போன்று தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் என்று பிரதிநிதித்துவப் படுத்துகின்ற  நாங்கள் எங்களது உயிர்களை கூட 207 போராளிகளை பறிகொடுத்துள்ளோம். இதனையிட்டு எமது மக்களிடம் நாங்கள் வேண்டிநின்றது நாங்கள் உங்களுக்கு கடந்த காலங்களிலே நீங்கள் தனிநாடு கோரியிருந்தீர்கள். அது இந்த நாட்டிலே சாத்தியமற்றது. அதிகாரப்பகிர்வை பெற்றுத்தருவோம். அழிந்திருக்கின்ற நாட்டை கட்டித்தருவோம் என்றுதான் இந்த ஆட்சிக்கு வந்தோம். வந்திருக்கின்றபோது நாங்கள் செய்கின்ற விடயம் எல்லாவற்றையும் தாரைவார்த்து கொடுத்துவிட்டு சென்றால் மக்கள் எவ்வாறு எங்களைப் பற்றிப் பேசுவார்கள்?  பதில் சொல்வதற்கு இந்த மாகாண சபைதான் சாட்சியாக இருக்கும், அந்த அடிப்படையில் நாங்கள் இதை விரும்பிச் செய்யவில்லை 100 வீதம் விரும்பி செய்யவில்லை விரும்பாமலும் ஒட்டுமொத்த ஆட்சி இருக்க வேண்டும் இந்த மாகாணத்தை பாதுகாக்க வேண்டும் என்கின்ற விடயத்தை எங்களால் முடியாமல் இருக்கின்ற விடயத்தை தெரிந்தும் நாங்கள் ஆதரிக்கின்றோம் என்கின்ற விடயத்தை எதிர்கால சந்ததியினர் விளங்கிக்கொள்ள வேண்டும.; என்பதற்காக வேண்டித்தான்; எமது கட்சிகள் இன்று இதனை ஆதரிப்பதற்கான முடிவினை எடுத்திருக்கின்றது. சில வேளைகளில் நாங்கள் இதனை ஆதரிக்காமல் திருப்பி அனுப்பினால்கூட அரசின் பெருமபான்மைப் பலத்தினால் இயல்பாகவே பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து அங்கிகாரம் பெற்று விடும். இவைகளையெல்லாம் நன்கு தெரிந்தவர்களாகவும் காலத்தின் கட்டாயத்தினாலும் கொள்கையளவில் இதனை நாம் ஆதரித்தே தீர வேண்டும் என்கின்ற கட்டாயத்தில் இருக்கின்றோம். அதனாலே ஆதரித்தோம். ஆகவே அன்பான உறுப்பினர்களே! நாம் அனைவரும் இதனை விரும்பியோ விரும்பாமலோ இதனை ஆதரிக்க வேண்டும் என்பதைத்தான் எமது கௌரவ உறுப்பினர்களிடம் கேட்டுக்கொள்கின்றேன்.
அது மாத்திரமல்ல இது எதற்கு ஒப்பான விடயம் என்றால் கௌரவ தவிசாளர் அவர்களே! நாங்கள் திருமணம் முடித்து ஒரு அழகான குழந்தையை பெற்றுக்கொண்டால். அந்த குழந்தை ஒரு விபத்தில் சிக்கியபோது இரத்தப்பெருக்கு ஏற்படுகின்றது. அந்த குழந்தைக்கு இரண்டு பொயின்ற் இரத்தம் கொடுத்தால் மாத்திரமே குழந்தை பிளைக்குமாக இருந்தால். தந்தையினதும் குழந்தையினதும் இரத்தம் ஓ பிளசாக இருக்கின்ற பட்சத்தில், தந்தையின் இரத்தைத்தை செலுத்திகூட அந்த குழந்தையை காப்பாற்ற முடியாத நிலை ஏற்பட்டு அக்குழந்தை மரணித்தால் என்ன இடம்பெறும் என்கின்ற ஒரு தகப்பனின் நிலைகூட எனக்கு இங்கு ஏற்பட்டிருக்கின்றது. ஆகவே இது ஒரு கவலையான விடயமுமாகும். இதில் உண்மையிலேயே இந்த நாட்டிலே இருக்கின்ற தலைவர்கள், பாராளுமன்ற பிரதிநிதிகள் சரியாக புரிந்து கொள்ள வேண்டும். அவர்களது தனிப்பட்ட தேவைகளுக்காகவும் தங்களது ஆசைகளுக்காக மாத்திரம் அல்ல. உண்மையிலேயே இங்கு இருக்கின்ற சிறுபான்மை மக்களின் சந்தேகங்களை போக்குகின்ற அடிப்படையில் அமைந்திருக்க வேண்டும். வெறுமனே தங்களுக்கு தேவையான விடயங்களை திருத்திவிட்டு, தங்களுக்கு தேவையான விடயங்களை செய்து கொடுக்க வேண்டும். ஆகையால் எமது நாட்டின் கடந்த கால விடயங்களை அனுபவங்களை நாங்கள் மாறக்காமல் இன்னமும் பிரச்சினைகளை உருவாக்காமல் சிறுபான்மை எதிர்கட்சியாக இருக்கக்கூடாது என்கின்ற விடயங்களை எல்லாம் கருத்திற்கொண்டு, இந்த விடயத்தை பெரிதாக பேசிப் பேசி எமது கூட்டை உடைத்து அழிப்பதைவிட அது மாத்திரமல்ல, எமது நாடடில் இருக்கின்ற அநியாயம் என்னவென்றால் எமது கட்சிக்கு பின்னால் முன்னால் எங்கோ செல்ல வேண்டும் என்கின்ற பல பிரச்சினைகளை எல்லாம் சிந்தித்து தொடர்ந்தும் மத்திய அரசோடு ஓர் புரிந்துணர்வுடண் இணைந்து செயற்பட வேண்டும் என்கின்ற பலதரப்பட் விடயங்களை கருத்திற்கொண்டுதான் நாங்கள் எமது தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி ஆதரவு வழங்க முன்வந்துள்ளது. ஆகையால் இதனை எமது மக்கள் ஒட்டுமொத்தமாக விளங்கிக்கொள்ளவேண்டும் என்கின்ற அடிப்படையில் நான் இதனை பேசியிருந்தேன். அந்த அடிப்படையில் இந்த விடயத்தில் பல நல்ல விடயங்களும் இருக்கின்றது. நாங்கள் இங்கு சுட்டிக்காட்டியிருக்கின்ற விடயங்கள் அதனோடு ஏனைய கௌரவ உறுப்பினர்களின் பார்வையில் இருக்கின்ற விடயங்களும் எதிர்காலத்தில் திருத்திக் கொள்ளப்பட வேண்டும். இருந்தும் இதனை திருத்தினாலும் சரி திருத்தாவிட்டாலும் சரி கவலையோடு நாங்கள் ஆதரித்தே அனுப்புகின்றோம் என்று கூறி எனது உரையை முடிக்கின்றேன்.  நன்றி வணக்கம்.

0 commentaires :

Post a Comment