எமது நாட்டினைப் பொறுத்த வரையில் தேவைகளோடு ஒப்பிடுகின்ற போது வளங்கள் அருமையாகவே காணப்படுகின்றது. அதனால் நாம் நினைக்கின்ற விடயங்களை சாதிக்க முடியாமலும் இல்லை. எங்களுக்காக இருக்கின்ற வளங்கள் அனைத்தையும் பூரணமாகப் பயன்படுத்தி உச்சப் பயனைப் பெற வேண்டும் என கிழக்கு மாகாண முதலமைச்சர் சி. சந்திரகாந்தன் குறிப்பிட்டார். இன்று(01.10.2010) மட் முறுத்தானை ஸ்ரீ முருகன் வித்தியாலயக்கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டுவிழாவும் சிறுவர் தினக் கொண்டா ட்டமும் நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். கிழக்கு மாகாணத்தில் உள்ள அனைத்து மக்களும் யுத்தத்தின் விளைவினை எதிர்கொண்டவர்கள். அதிலும் குறிப்பாக தமிழ் மக்கள் பெருமளவிலான இழப்புக்களைச் சந்தித்திருக்கிறார்கள். குறிப்பிட்ட சில இழப்புக்களை எம்மக்களாலும் மீள பெற முடியாது. ஆனால் திரும்பப் பெறக் கூடிய ஒரே ஒரு வளம் கல்விச் செல்வம் மாத்திரம் தான். ஆகவே எமக்கு இவ்வளவு காலமும் இருந்த தடைகள் தற்போத கல்வி கற்பதற்கு இல்லை. சுதந்திரமாக நாம் நமது தேவைகளை நிறைவு செய்து கொள்ளக் கூடிய சூழல் ஏற்பட்டிருக்கின்றது. ஆகவே எமக்குக் கிடைத்திருக்கின்ற இச் சந்தர்ப்பத்திலே நாம் கடந்த காலங்களில் இழந்த இழப்புக்களை எல்லாம் ஈடு செய்வதானால் கல்விதான் எமக்கு மூலப் பொருள் எனவே நாம் அதனைச் சீராகக் கற்க வேண்டும் . கற்பதற்கான சூழலை உருவாக்கின் கொள்ள வேண்டும். எதுவும் எங்களுக்கு இல்லை என்று கொண்டு நாம் காலங்கடத்த முடியாது. இருக்கின்ற வளங்களைக் கொண்டு எமது தேவைகளை நிறைவு செய்து கொண்டு வாழப் பழக வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டார்.
0 commentaires :
Post a Comment