10/18/2010

செங்கலடி பிரதேச மேச்சற் தரை பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு

beef02மட்டக்களப்பு மாவட்டத்தில் செங்கலடி பிரதேச செயலகத்திற்குட்பட்ட பொத்தானைமடு சாரம்போட்டமடு புளியடிப்பொத்தானை புளுட்டுமாவடு போன்ற பிரதேசங்களில் மாடு வளர்ப்புக்கான மேச்சற் தரை பிரச்சினை மிக நீண்ட நாளாக இருந்து வந்தது. இப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண்பதற்கான விசேட கூட்டம் ஒன்று இன்று கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தலைமையில்  செங்கலடி பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது. மேச்சத்தரைக்கான காணிகள் தங்களது விவசாய காணிகள் என ஏறாவுர் பிரதேசத்தை சேர்ந்த சில விவசாயிகள் நீண்ட நாளாக கோரிக்கை வைத்து வந்தனர் இருந்தும் அரச உறுதிப்பத்திரங்கள் இல்லாத நிலையில் வெறுமனே ஒப்பங்களை மாத்திரம் வைத்துகொண்டே இவர்களால் இக்கோரிக்கைகள் வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.. இக்கூட்டத்தில்batticalo_cha_map நீண்ட நேர விவாதங்களின் பின்பு மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்தின் பிரகாரம் மேச்சரத்த்தரைக்கான காணிகள் முறைப்படி வழங்கப்படவேண்டும் என்றவுடன் கட்கடக்களி அண்மித்த பகுதியில் 40 ஏக்கர் வயல் காணிகளுக்கான வரம்புகள் கட்டப்பட்டு நெற்செய்கை இடம்பெற்று வருவதனால் மாடுகள் வயல்களை சேதப்படுத்தாத வகையில் வேலிகள் அமைக்கப்பட்டு நெற்செய்கை மேற்கொள்ளப்பட  வேண்டும் என்பதுடன் தற்போதைய நெற்செய்கை முடிந்தவுடன் அக்காணி உரிமையாளர்களுக்கு நெற்செய்கைக்கு  வேறு இடங்களில் காணிகள் வழங்கப்படும் என்பதுடன். மேச்சற்தரைக்கு ஒதுக்கப்பட்ட பகுதிகளில் மாத்திரம் மேச்சல் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் இங்கு தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது. இப்பிரச்சினை தொடர்பான உண்மை நிலையினை அறிந்து கொள்ள வாகனங்கள் செல்ல முடியாத பகுதியில் சுமார் 10 கிலோ மீற்றர் தூரம் முதலமைச்சர் உட்பட அதிகாரிகள் அனைவரும் நடந்து சென்று நிலைமையினையும் மேச்சல் நிலங்களையும் பார்வையிட்டமை குறிப்பிடத்தக்கது. இக்கூட்டத்தில் செங்கலடி பிரதேச செயலாளர் உட்பட மாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் அரச அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர்

0 commentaires :

Post a Comment