10/05/2010

தமிழர் விடுதலைக் கூட்டணியின் கிளிநொச்சி மாவட்டத் தலைமைச் செயலகம் திறந்து வைப்பு

தமிழர் விடுதலைக் கூட்டணியின் கிளிநொச்சி மாவட்டத் தலைமைச் செயலகம் 02.10.2010 மாலை 4.00மணிக்கு தந்தை செல்வாவின் புதல்வர் செல்வநாயகம் சந்திரகாசன் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. இந் நிகழ்வின்போது பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டனர். தலைவர் வீ.ஆனந்தசங்கரியின் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்தும் கட்சியின் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் திரு. கிருஷ்ணபிள்ளை (வெள்ளிமலை) உதய சூரியன் கொடியினை ஏற்றி வைத்தார். பின்னர் தந்தை செல்வாவின் திருவுருவச் சிலையினை மட்டக்களப்பைச் சேர்ந்த திரு மருதநாயகம் அவர்கள் திரை நீக்கம் செய்து வைத்தார். பின்னர் தமிழர் விடுதலைக் கூட்டணியின் கிளிநொச்சி மாவட்டத் தலைமைச் செயலகத்தை திரு செல்வநாயகம் சந்திரகாசன் அவர்கள் நாடா வெட்டி சம்பிரதாய பூர்வமாக திறந்து வைத்தார்.

0 commentaires :

Post a Comment