10/16/2010

மட்டக்களப்பில் புதிய தபாலக கட்டிடங்கள் திறந்து வைப்பு

 
  மட்டக்களப்பு மாவட்டத்தில் கிழக்கின் உதயம் வேலைத் திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட மூன்று புதிய தபாலக கட்டிடங்கள் இன்று தபால் தொலைத் தொடர்புகள் அமைச்சர் ஜீவன் குமாரதுங்கவினால் திறந்து வைக்கப்பட்டன.

கல்குடா மற்றும் பெரிய போரதீவு மண்டூர் ஆகிய பிரதேசங்களில் சுமார் 27 மில்லியன் ரூபா செலவில் நிர்மானிக்கப்பட்ட புதிய தபாலக கட்டிடங்களை அமைச்சர் ஜீவன் குமாரதுங்க திறந்து வைத்தார்.

மீள் குடியேற்ற பிரதியமைச்சர் விநாயக மூர்த்தி முரளிதரனின் அழைப்பை ஏற்று மட்டக்களப்பு மாவட்டத்திற்கு சென்ற அமைச்சர் ஜீவன் மட்டக்களப்பு பிரதம தபால் அலுவலகத்துக்கு சென்று அங்குள்ள ஊழியர்களை சந்தித்ததுடன் மட்டக்களப்பு மாவட்ட அஞ்சல் ஊழியர்கள் சங்கத்தினரையும் சந்தித்து அவர்களுடன் கலந்துரையாடினார்.

இதன் போது பிரதியமைச்சர் முரளிதரன் மற்றும் கிழக்கு மாகாண பிரதி அஞ்சல் மா அதிபர், மட்டக்களப்பு மாவட்ட அஞ்சல் அத்தியட்சகர் புவனசுந்தரம் உட்பட அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

0 commentaires :

Post a Comment