பாகிஸ்தானில் உள்ள மாநிலங்களில் ஒன்று பலுசிஸ்தான். இந்த மாநிலத்தில் தான் பெட்ரோல் அதிக அளவில் கிடைக்கிறது. இயற்கை வளம் அதிகமாக இருந்தாலும் தொழில்வளமோ, முன்னேற்றமோ அதிகம் இல்லாமல் பின்தங்கிய பகுதியாக இந்த மாநிலம் இருக்கிறது. இதனால் பலுசிஸ்தான் மாநிலத்துக்கு சுயாட்சி கோரி அந்த மாநில மக்கள் போராடி வருகிறார்கள்.
பலுச் மக்களின் தலைவரான நவாப் அக்பர் புக்தி, ‘ஜம்பூரி வாட்டன் கட்சி’ என்ற பெயரில் ஒரு அமைப்பை தொடங்கி அதன் சார்பில் பல போராட்டங் களை நடத்தி வந்தார். பலுசிஸ்தான் தேசியத் தலைவராக அவர் இருந்தார்.
குகைக்குள் கொலை
புக்தி நடத்திய போராட்டங்கள் சர்வாதிகாரியாக இருந்த முஷரப்புக்கு பெரும் தலைவலியாக இருந்தது. இதனால் அவர் 2006ம் ஆண்டு ஆகஸ்ட் 26ம் திகதி புக்தியை ஒரு குகைக்குள் கொலை செய்யப்பட்டார்.
குவெட்டா நகரில் இருந்து 100 கி.மீ.க்கும் அதிகமான தொலைவில் உள்ள குகையில் இந்த கொலை நடந்தது. இதைத் தொடர்ந்து அந்த மாநிலத்தில் கலவரம் வெடித்தது.
கலவரத்தை அடக்குவதற்காக முஷரப் இராணுவத்தை அனுப்பி அப்பாவிகளை கொன்று குவித்தார்.
0 commentaires :
Post a Comment