10/08/2010

வீடமைப்பு, ரயில் பாதை இந்திய வெளியுறவு அமைச்சர் கிருஷ்ணா வடக்கில் அபி. திட்டங்களுக்கு அடிக்கல்

உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இலங்கை வரவுள்ள இந்திய வெளியுறவு த்துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா வடக்கில் இந்திய அரசின் உதவியினால் முன் னெடுக்கப்படவுள்ள பல்வேறு அபிவிருத்தி திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டவுள்ளார்.
எதிர்வரும் 29 ஆம் திகதி வட மாகாணத்திற்கு விஜயம் செய்யவுள்ள அவர் வீடமைப்புத் திட்டம், ரயில் பாதைகள் அமைக்கும் வேலைத்திட்ட ங்களுக்காக அடிக்கல் நாட்டவுள் ளதாக வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜீ.ஏ. சந்திரசிறி தெரிவித்தார்.
வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜீ. ஏ. சந்திரசிறிக்கும் இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் அசோக் கே. காந்திற்கும் இடையிலான சந்திப்பு ஒன்று நேற்று இடம்பெற்றுள்ளது.
யாழ். அரசாங்க அதிபர் காரியாலயத்தில் இடம்பெற்ற இந்த சந்திப்பின் போதே மேற்படி விடயங்கள் தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டுள்ளன. மடுவிலிருந்து தலை மன்னார் வரையும் ஓமந்தையிலிருந்து பளை வரையும் இந்திய அரசின் உதவியுடன் ரயில் பாதை அமைக்கப்படவுள்ளது.
எதிர்வரும் 29 ஆம் திகதி மாங்குளம் பிரதேசத்தில் நடைபெறவுள்ள அடிக்கல் நாட்டும் நிகழ்வில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். எம். கிருஷ்ணா கலந்து கொள்ளவுள்ளார்.
இதேவேளை, இந்திய அரசின் உதவியுடன் வடபகுதியில் 50 ஆயிரம் வீடுகள் நிர்மாணிக்கப்படவுள்ளது. இதன் ஆரம்பகட்டமாக யாழ்ப்பாணத்தில் நிர்மாணிக்கப்படவுள்ள 150 வீடுகளுக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்விலும் அமைச்சர் எஸ். எம். கிருஷ்ணா கலந்து கொள்ளவுள்ளதாக ஆளுநர் மேலும் தெரிவித்தார்.
வட பகுதிக்கு விஜயம் செய்யும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் தலைமையிலான உயர் மட்டக்குழுவினர் யாழ்ப்பாணம் உட்பட வடக்கின் பல்வேறு பகுதிகளுக்கும் செல்லவுள்ளதாக ஆளுநர் குறிப்பிட்டார்

0 commentaires :

Post a Comment