10/01/2010

அல்ஹாஜ் தகவல் மையம் திறப்பு விழா* அக்கரைப்பற்று

அல்ஹாஜ் தகவல் மையம் திறப்பு விழா அக்கரைப்பற்று பிரதேச சபை தவிசாளர் தவம் தலைமையில் நேற்று(29.09.2010) இடம்பெற்றது. இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக மாகாண உள்ளுராட்சி அமைச்சர் அதாவுல்லாவும் சிறப்பு விருந்தினராக கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனும் கலந்து சிறப்பித்தனர்.
 நவீன உலகிற்கு ஈடு கொடுக்கும் முகமாக தகவல் பரிமாற்றம் என்பது இன்றியமையாத ஒன்றாக இருக்கின்றது. அதனடிப்படையில் விசேடமாக மாணவர்கள் தகவல்களை தேடி கற்பதில் ஆர்வம் உடையவர்களாக இருக்க வேண்டும். அத்தோடு இளைஞர் யுவதிகள் மற்றும் பெரியவர்களும்கூட இன்று தகவல் தொடர்பு சாதனங்களோடு பின்னிப் பிணைந்தவர்களாக காணப்படுகின்றார்கள். நவீன உலகின் வளர்ச்சிக்கேற்ப நாமும் ஈடுகொடுக்க வேண்டும் என்பதற்கு தகவல் தொடர்பு சாதனம் மற்றும் தகவல் மையங்கள் அவசியமானதாக கருதப்படுகின்றது. அதனடிப்படையில் இன்று அமை;கப்பட்டிருக்கின்ற இத்தகவல் மையத்தின் ஊடாக அனைத்து பிரிவினரும் பயன்பெற இது ஒரு வரப்பிரசாதமாக அமையும் எனவும் முதலமைச்சர் சந்திரகாந்தன் குறிப்பிட்டார்.
 img_9191
50
img_9217
img_9255

0 commentaires :

Post a Comment