கல்முனை கலை இலக்கிய நண்பர்கள் அமையத்தின் செயலாளர் எழுத்தாளர் எஸ். அரசரெத்தினம் எழுதிய ‘சாம்பல் பறவைகள்’ – குறு நாவல் அறிமுக விழா எதிர்வரும் 09.10.2010 ஆந் திகதி சனிக்கிழமை மாலை 4.00 மணிக்கு கல்முனை கிறிஸ்தா இல்ல மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
ஓய்வுபெற்ற உதவிக் கல்விப் பணிப்பாளரும், கல்முனை கலை இலக்கிய நண்பர்கள் அமையத்தின் தலைவியுமான திருமதி க. லோகிதராசா தலைமையில் இடம்பெறவுள்ள இந் நிகழ்வில் எகெட் - கரிட்டாஸ் நிறுவன மட்டக்களப்பு கல்முனை பிராந்திய இயக்குநர் அருட் தந்தை பேராசிரியர் த. சில்வஸ்டர் சிறிதரன் அடிகளார் பிரதம அதிதியாகவும், கல்முனை தமிழ் பிரிவு பிரதேச செயலாளர், கந்தையா - லவநாதன் கெளரவ அதிதியாகவும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.
கல்முனை கலை இலக்கிய நண்பர்கள் அமையத்தின் உப தலைவி டாக்டர் திருமதி புஸ்பலதா லோகநாதனின் வரவேற்புரையுடன் ஆரம்பமாகும் இந் நிகழ்வின் தொடக்க உரையினை பிரபல கவிஞர் சண்முகம் சிவலிங்கம் நிகழ்த்துவார்.
தென் கிழக்குப் பல்கலைக்கழக பதில் பதிவாளர் மன்சூர் ஏ. காதர் நூல் அறிமுகவுரையினையும், பிரபல அரசியல் ஆய்வாளரும், எழுத்தாளருமான சி. அ. யோதிலிங்கம் நூல் விமர்சன உரையையும், பிரபல எழுத்தாளர் உமா வரதராஜன் சிறப்புரையினையும் நிகழ்த்துவார்
0 commentaires :
Post a Comment