10/22/2010

நடுக்கடலில் தத்தளித்த 85 இலங்கையர் இந்தோனேசியாவில் மீட்பு

படகொன்றில் அவுஸ்திரேலியாவை நோக்கிப் பயணித்த இலங்கையைச் சேர்ந்த 85 புகலிடக் கோரிக்கையாளர்களை இந்தோனேசியத் துறைமுகப் பொலிஸார் தடுத்து மீட்டுள்ளனர். இவர்கள் பயணித்த படகு எரிபொருள், உணவு மற்றும் நீர் பற்றாக்குறை காரணமாக பனாயிட்டான் தீவில் இடைநடுவில் நின்ற போது துறைமுகப் பொலிஸார் இவர்களை மீட்டுள்ளனர்.
இவர்கள் கடந்த ஓகஸ்ட் மாதம் 31ஆம் திகதி இலங்கையிலிருந்து பயணத்தை ஆரம்பித்துள்ளனர்.
மீட்கப்பட்டவர்களில் 15 பெண்களும், 18 குழந்தைகளும் அடங்குவர். இவர்களில் பல குழந்தைகள் சுகயீனமுற்றிருந்ததாகவும், பலர் பல நாட்கள் ஒழுங்கான உணவின்றி தவித்து வந்ததாகவும் தெரிய வந்துள்ளது. ஆரம்பகட்ட விசாரணையில் படகில் சென்றவர்களில் ஒரு பெண் மற்றும் ஆண் உட்பட இருவர் மரணமடைந்துள்ளனர். மீட்கப்பட்ட அனைவருக்கும் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாக இந்தோனேசியச் செய்திகள் தெரிவிக்கின்றன.
தற்போது இவர்கள் ஜகார்த்தாவிலுள்ள இந்தோனேசிய குடிவரவு தடுப்பு முகாமுக்கு அழைத்துச் செல்லப்பட்டு மேலதிக விசாரணைகளுக்கு உட்படுத்த ப்பட்டுள்ளனர்.

0 commentaires :

Post a Comment