10/07/2010

ஒக்ரோபர் 5ம் திகதி சர்வதேச ஆசிரியர் தினம்

 

img_0083உலக ஆசிரியர் தினத்தையொட்டி திருகோணமலை வலயக்கல்வி அலுவலகம் நடாத்திய ஆசிரியர் தின விழாவில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
திருகோணமலை வலயக்கல்வி பணிப்பாளர் திருமதி எஸ்.கே.ஆனந்தராஸா தலைமையில் திருகோணமலை பெருந்தெரு விக்னேஸ்வரா மகா வித்தியாலய கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற நிகழ்வில் தொடர்ந்து பேசிய முதலமைச்சர் சந்திரகாந்தன்.
ஒக்ரோபர் 5ம் திகதி சர்வதேச ஆசிரியர் தினம் ஆனால் இன்று இத்தினம் திருமலை கல்வி வலயத்தின் ஏற்பாட்டில் கொண்டாடப்படுகின்றது. இவ்வாறாக கற்றவர்கள் கூடி இருக்கும் இவ் அவையில் கற்பித்தவர்களைக் கௌரவிக்கின்ற இந்நிகழ்வில் கலந்துகொள்வதனையிட்டு நான் பெருமிதம் அடைகின்றேன். என்னைப் பொறுத்தவரையில் ஆசிரியர்களை கௌரவப்படுத்துவதற்கு ஒரே ஒரு நாள் ஒதுக்கப்பட்டிருப்பதென்று கருத முடியாது. ஆசிரியர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு நாளும் கௌரவிக்கப்படவேண்டியவர்கள். காரணம் ஒவ்வொரு பிள்ளைகளினதும் எதிர்காலங்களும் ஏதோ ஒரு ஆசிரியரிடம் ஒப்படைக்கப்படுகின்றது. அவ் ஆசிரியர்தான் அப்பிள்ளையினது எதிர்காலத்தின் திறவுகோல் அவ் ஆசிரியர் ஓர் நற்பண்பாளராக இருக்கும் பட்சத்தில் அப்பி;ள்ளையையும் நல்லதோர் நற்பண்பாளராக மாற்ற அரும்பாடு படுவார். பெரும்பாலான ஆசிரியர்கள் அவ்வாறேதான் இருக்கின்றார். எனவே எதிர்காலத்தில் ஓர் சமூகத்தை உருவாக்குகின்ற இந்த உத்தமர்களுக்கு நாம் விழா எடுத்தால் கூட அது பிழையாகாது. எனவே ஒவ்வொரு மாணவனும் தனது ஆசிரியரை மதிக்கக் கூடியவனாக இருக்க வேண்டும். அப்போதுதான் அவனது வாழ்கை சீராக அமையும்.
 மேலும் குருவை பேணுகின்ற வழக்கம் எமது புராண இதிகாசங்களிலே மிகவும் அழகாக குறிப்பிடப்பட்டிருக்கின்றது. ஆனால் நவீன இவ்வுலகில் அவ்வாறுதான் இல்லாவிட்டாலும் மனதளவிலேனும் ஒவ்வொரு மாணவனும் தனக்கு கல்வி எனும் களஞ்சியத்தை கசப்பின்றி ஊட்டுகின்ற ஆசானை மதிப்பவர்களாக திகழ வேண்டும் அப்போதுதான் சமூகத்திலே எமக்கு சரியான அக்கறை மற்றும் பிறரை மதிக்கின்ற பண்பு என்பன எம்மிடம் காணப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
எது எவ்வாறாயினும் ஆசிரியர்களும் தமக்கென ஒதுக்கப்பட்டிருக்கின்ற கடமைகளை சேவை மனப்பான்மையோடு செய்ய முன்வரவேண்டும். பெறுகின்ற ஊதியங்களுக்காக பணி செய்வதென்று இராது சமூகத்தின் பால் அக்கறை கொண்டவர்களாகவும். பற்றாளர்களாகவும் தங்களை மாற்றிக்கொண்டு இவ் ஆரிய ஆசிரியர் சேவையினை வழங்க வேண்டும். ஒரு நாட்டின் அனைத்துத் துறைகளுக்கும் காரண கர்த்தா ஆசிரியர்களே. அது அரசியலாக இருக்கட்டும் பொருளாதாரமாக இருக்கட்டும் அபிவிருத்தியாக இரக்கட்டும் எது எவ்வாறாயினும் அனைத்திற்கும் காரணமானவர்கள் ஆசிரியர்கள்தான். எனவே கிழக்கு மாகாணத்தைப் பொறுத்தமட்டில் ஆசிரியர்களின் பணியானது உண்மையிலேயே பாராட்டப்படவேண்டியது. கடந்த 30 வருடங்களாக பல்வேறு இன்னல்களுக்கும் முகம் கொடுத்த எமது ஆசிரியர் குழாம் இன்று மிகவும் ஆர்வத்தோடு எமது மாகாணத்தை கல்வியில் முன்கொண்டுவரவேண்டும் என உழகை;கின்றார்கள் இவர்கள் நிச்சயமாக கௌரவிக்கப்படவேண்டியவர்கள்தான் எனவும் முதலமைச்சர் குறிப்பிட்டார்.
இந்நிகழ்வில் கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் பிரதிச் செயலாளர் தண்டாயுதபாணி, மாகாண கல்வி பணிப்பாளர் நிஷாம் மற்றும் விரிவுரையாளர்கள் என பலருமம் கலந்துகொண்டனர்.
img_9951
img_9975
img_0091
img_9978
img_0062

0 commentaires :

Post a Comment