10/01/2010

இராணுவ நீதிமன்றின் தீர்ப்புக்கு ஜனாதிபதி மஹிந்த அங்கீகாரம் * 30 மாத கடூழிய சிறை * எம்.பி பதவியும் ரத்தாகும்

முன்னாள் இராணுவத்தளபதி சரத் பொன்சேகாவுக்கு இரண்டாவது இராணுவ நீதிமன்றம் வழங்கிய 30 மாத கடூழிய சிறைத்தண்டனைக்கு முப்படைகளின் தளபதி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அங்கீகாரம் வழங்கியுள்ளதாக இராணுவப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் உதய மெதவெல கூறினார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு தகவல் ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவின் தலைமையில் நேற்று நடைபெற்றது. இங்கு கருத்துத் தெரிவிக்கையிலே இராணுவப் பேச்சாளர் மேற்கண்டவாறு கூறினார்.
இதன் பிரகாரம் பொன்சேகாவுக்கு எதிரான சிறைத்தண்டனை நேற்று முதல் அமுலாவதோடு அவரது பாராளுமன்ற உறுப்பினர் பதவியும் இரத்தாவதாக அமைச்சரவைப் பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.
இராணுவ சேவையில் ஈடுபட்டிருக்கையில் கேள்விப் பத்திர நடைமுறைகளுக்குப் புறம்பாக செயற்பட்டது குறித்து விசாரணை செய்வதற்காக இரண்டாவது இராணுவ நீதிமன்றம் நியமிக்கப்பட்டது. சரத் பொன்சேகாவுக்கு எதிராக 4 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிரு ந்ததோடு அது தொடர்பான தீர்ப்பு கடந்த 17 ஆம் திகதி வழங்கப்பட்டது. பொன்சேகாவுக்கு எதிரான 4 குற்றச் சாட்டுகளுக்கும் அவர் குற்றவாளி என்று முடிவு செய்த இராணுவ நீதிமன்றம் 30 மாத கடூழிய சிறைத்தண்டனை வழங்கி தீர்ப் பளித்தது.
இது தொடர்பாக மேலும் கருத்துத் தெரிவித்த இராணுவப் பேச்சாளர், சரத் பொன்சேகாவுக்கு எதிரான தண்டனையை முப்படைகளின் தளபதியான ஜனாதிபதி கடந்த 29 ஆம் திகதி அங்கீகரித்ததாகக் கூறினார்.
இராணுவச் சட்டத்தின் 109 (இ) சரத்தின் பிரகாரம் இராணுவத்திற்கு அபகீர்த்தி ஏற்படுத்தும் வகையில் நடந்தது தொடர்பில் 4 குற்றச்சாட்டுகள் பொன்சேகாவுக்கு எதிராக சுமத்தப் பட்டிருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
சரத் பொன்சேகாவுக்கு எதிரான தீர்ப்புக்குறித்து கருத்துத் தெரிவித்த அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல,
அரசியல் யாப்பின் பிரகாரமே பொன்சேகாவுக்கு எதிராக விசாரணை நடத்த இராணுவ நீதிமன்றம் நியமிக்கப்பட்டு அவருக்கு எதிராக தண்டனை வழங்கப்பட்டது. இவருக்கு எதிரான தண்டனை ஜனாதிபதியினால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இதனால் பொன்சேகாவின் எம்.பி. பதவியும் ரத்தாகிறது.
இந்தத் தண்டனை பக்கசார்பற்றதல்ல. இந்தத் தீர்ப்புக்கு எதிராக அவருக்கு மேன்முறையீடு செய்ய முடியும். இந்தத் தீர்ப்பை எதிர்க்கவோ ஏற்காதிருக்கவோ எதிர்க்கட்சிகளுக்கு உரிமை உள்ளது. தீர்ப்பை எதிர்த்து போராட்டம் நடத்துவது அவர்களின் ஜனநாயக உரிமையாகும்.
நாட்டின் ஏற்கப்பட்ட சட்டக் கட்டமைப் பின் படியே தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது என்றார்.

0 commentaires :

Post a Comment