10/01/2010

18ஆவது அரசியலமைப்பு சபைக்கு அஸ்வர், சுவாமிநாதன் தெரிவு




  18ஆவது அரசியலமைப்பின் நாடாளுமன்ற சபைக்கான பிரதிநிதிகளைப் பிரதமரும், எதிர்க்கட்சித் தலைவரும் இன்று பரிந்துரை செய்துள்ளனர்.

பிரதமர் டி.எம். ஜயரட்னவின் பிரதிநிதியாக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம். அஸ்வர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளார் எனவும் -

எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கவின் பிரதிநிதியாக ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் சுவாமிநாதன் பரிந்துரை செய்யப்பட்டுள்ளார் எனவும் அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவர்களின் பெயரை ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என சபாநயாகர் சமால் ராஜபக்ஷ தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

பரிந்துரை செய்யப்பட்ட இரு உறுப்பினர்களுக்கு மேலதிகமாக பிரதமர், சபாநாயகர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோர் மேற்படி சபையிம் அங்கம் வகிப்பர் எனவும் தெரிவிக்கப்படுகிறது. ___

0 commentaires :

Post a Comment