10/06/2010

மட்டு, மாவட்ட அபிவிருத்திக்கு 15319 மில்லியன் உதவி

மட்டக்களப்பு மாவட்டத்தில் இவ்வாண்டு அபிவிருத்தி பணிகளுக்கென சர்வதேச உதவி நிறுவனங்கள் 15319 மில்லியன் ரூபாயை ஒதுக்கீடு செய்துள்ளதாக மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் இரா.நெடுஞ்செழியன் தெரிவித்தார். இந்நிதியின் மூலம் மாவட்டத்தின் சகல பிரதேச செயலகப் பிரிவுகளிலும் 676 அபிவிருத்திப் பணிகள் மேற்கொள்ளப்பட்;டு வருகின்றன.
இத்திட்டங்களில் கடந்த ஆகஸ்ட் மாதம் வரையில் 8946 மில்லியன் செலவில் சுமார் 60 சதவீத அபிவிருத்திப்பணிகள் நிறைவடைந்துள்ளன.
ஆசிய அபிவிருத்தி வங்கி, உகல வங்கி என்பனவற்றினூடாகவே இந் நிதியொதுக்கீடுகள் இடம்பெற்றுள்ளன.
நெக்டெப், நெகோர்ட், ஜெய்கா, ஜெபிக், ஏஎப்டி, நியாப், நேர்ப்,ஆகிய நிறுவனங்களுடாக அபிவிருத்திப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவது குறிப்படத்தக்கது.
குடிநீர்த் திட்டம், கல்லடிபாலம், திருக்கொண்டியாமடு முதல் அக்கரைப்பற்று வரையான காபர்ட் வீதி என்பன வெளிநாட்டு; நிதியில் மேற்கொள்ளடும் பிரதான அபிவிருத்தி பணிகள் என்பது குறிப்படத்தக்கது.

0 commentaires :

Post a Comment