10/20/2010

மேலதிக 11 வாக்குகளினால் உள்ளுராட்சி திருத்தச் சட்டம் நிறைவேற்றம்

மேலதிக 11 வாக்குகளினால் உள்ளுராட்சி திருத்தச்சட்ட மூலத்திற்கான அங்கீகாரம் கிழக்கு மாகாண சபையில் இன்றிரவு நிறைவேற்றப்பட்டது.

திருத்தச்சட்ட மூலத்துக்கு ஆதரவாக 18 வாக்குகளும் எதிராக 7 வாக்குகளும் அளிக்கப்பட்டன.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்களும் ஜக்கிய தேசியக் கட்சியின் எதிர்கட்சித்தலைவர் தயகமேகேயும் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை.

இதே நேரம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உறுப்பினரான ஜவாத் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர் இரா துரைரத்தினம் ஆகிய இருவரும் பிரேரணைக்கு எதிராக வாக்களித்தனர். மக்கள் விடுதலை முன்னணியின் உறுப்பினர் சபையிலிருந்து வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல் வெளியேறிச் சென்றார்.

வாக்கெடுப்பு இன்றிரவு 10.40 மணியளவில் இடம்பெற்றது. கிழக்கு மாகாண சபைக் கூட்டம் இன்று காலை 9.30 மணிக்கு தொடங்கி இன்றிரவு 10.40 மணிவரை நடைபெற்றது.

கிழக்கு மாகாண சபை கூட்டம் தொடங்கி இரவு 10.40 மணிவரை சபை அமர்வு இடம்பெற்றது இதுவே முதற் தடவையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

0 commentaires :

Post a Comment