10/08/2010

மட்டு. மாவட்ட அபிவிருத்திக் கூட்டம் 11 இல் _




  மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி குழுக்கூட்டம் எதிர்வரும் 11ஆம் திகதி திங்கட்கிழமை கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசத்துரை சந்திரகாந்தன் மற்றும் பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் ஆகியோரின் தலைமையில் நடைபெறவுள்ளது.

மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம், மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள், திணைக்களத் தலைவர்கள் உட்பட பலரும் கூட்டத்தில் கலந்து கொள்வர்.

இக்கூட்டத்தில் நீண்ட இடைவெளிக்குப் பின்னர் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் பஸீர் சேகு தாவுதும் பங்கேற்பார் எனத் தெரிவிக்கப்படுகிறது

0 commentaires :

Post a Comment