10/05/2010

நல்லிணக்க ஆணைக்குழு மட்டக்களப்பில் 09,10,11ம் நாட்களில் சாட்சியங்களைப் பதிவு செய்யும். _

 
  கற்றுக்கொண்டபாடங்களும் நல்லிணக்கமும் பற்றிய ஆணைக்குழு மட்டக்களப்பில் எதிர்வரும் 09,10,11ம் நாட்களில் சாட்சியங்களைப் பதிவு செய்யவிருப்பதாக அரசாங்கத் தகவல் திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட ஊடகப் பிரிவு தகவல் தெரிவிக்கின்றது. இதற்கான ஏற்பாடுகளை மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் மேற்கொண்டுள்ளார்.

இதன்படி இந்த ஆணைக்குழு எதிர்வரும் 09ஆம் திகதி முற்பகல் 9 மணி தொடக்கம் பிற்பகல் 12.30 மணி வரையில் மட்டக்களப்பு மாவட்டச் செயலகத்திலும,; மறுநாள் 10ஆம் திகதி முற்பகல் 9மணி தொடக்கம் நன்பகல் 12.00மணி வரையில் ஓட்டமாவடிப் பிரதேச செயலகத்திலும், மறுநாள் 11ம் திகதி முற்பகல் 08.30மணி தொடக்கம் பிற்பகல் 11.30மணி வரையில் செங்கலடி பிரதேச செயலகத்திலும் சாட்சியங்களைப் பதிவு செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த ஆணைக்குழு இலங்கை மக்களிடையே சமாதானத்தையும், இணக்கப்பாட்டையும் இடம்பெற்ற விடயங்கள் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டு அறிக்கையிடுவதற்காக ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டது. இந்த ஆணைக்குழு போர்நிறுத்த உடண்படிக்கை தோல்வியில் முடிவடையத் தூண்டுதலளித்த காரணிகளும் அதனைத் தொடர்ந்து இடம் பெற்ற நிகழ்வுகளும், குழுவெதுவும் அல்லது நிறுவனமெதுவும் நேரடியாக அல்லது மறைமுகமாக போர் நிறுத்த உடன்படிக்கை செயலிழப்பதற்குப் பொறுப்பு வகிக்கின்றதா?

மற்றும் அத்தகைய சம்பவங்கள் மீண்டும் இடம்பெறாதிருப்பதை உறுதிசெய்து கொள்வதற்காக அத்தகைய நிகழ்வுகளிலிருந்து நாம் கற்றுக் கொள்ளக் கூடிய பாடங்கள், சுபீட்சமும், இணக்கப்பாடும் அமைதி நிலையும் குடி கொண்ட யுகமொன்றைத் தோற்றுவிக்கும் முகமாக இலங்கையின் இனப்பிரிவுகளுக்கு இடையில் தேசிய ஐக்கியத்தையும் நல்லிணக்கத்தினையும் மேம்படுத்துவதற்கான முன்மொழிவுகள் என்பவற்றை பொதுவான இலக்குகளை எய்துவதற்கு அவசியமாகின்ற அத்தகைய உதவிகளையும் தகவல்களையும் நாட்டு நலனை எதிர்பார்க்கின்ற மக்கள் நலனை விரும்பும் சகலரிடமிருந்து கிடைக்கப் பெற்ற முறைப்பாட்டினடிப்படையில் ஆணைக்குழு முறைப்பாட்டினைப் பதிவு செய்யவுள்ளதாக அறிவிக்கப்படுகிறது. _

0 commentaires :

Post a Comment