உலக நாடுகளுக்கிடையே வர்த்தக நடவடிக்கைகளுக்கு உகந்த நாடுகளின் வரிசையில் இலங்கை 83 ஆவது இடத்தில் உள்ளது. ஆசியாவை பொறுத்தவரை இந்தியாவுக்கு அடுத்த இரண்டாவது இடத்தில் இலங்கை இருக்கிறது. உலக நாடுகளின் வரிசையில் இந்தியா 77 ஆவது இடத்தில் உள்ளது.
போர்ப்ஸ் சஞ்சிகை நடத்திய ஆய்விலேயே இந்த பட்டியல் வரிசை தெரிவு செய்யப்பட்டுள்ளது.
இலங்கை 83 ஆவது இடத்தை பிடித்துள்ள நிலையில் சீனா 90 ஆவது இடத்தையும் பிலிப்பைன்ஸ் 91 ஆவது இடத்தையும் ரஷ்யா 97 ஆவது இடத்தையும் பெற்றுள்ளன.
2010 இல் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மீண்டும் தெரிவு செய்யப்பட்டமை இல ங்கை தனது பொருளாதார நடைமுறைகளை தொடரக்கூடிய நிலையை ஏற்படுத்தியுள்ளது. அதன் மூலம் வறுமையை குறைக்கும் வகையில் மூலதனங்களை பாதகமான பிரதேசங்களுக்கு திருப்பி அப்பிரதேசங்களை வளப்படுத்துதல், சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சிகளை அபிவிருத்தி செய்தல், விவசாயத்தை ஊக்குவித்தல் மற்றும் சிவில் சேவையை விஸ்தரித்தல் ஆகிய நட வடிக்கைகளை மேற்கொள்ளக்கூடும் என்று போர்ப்ஸ் சஞ்சிகை சுட்டிக் காட்டியுள்ளது.
30 வருடகால யுத்தம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டதையடுத்து வடக்கு மற்றும் கிழக்கில் மீள் புனர் நிர்மாண மற்றும் அபிவிருத்தி நடவ டிக்கைகளை மேற்கொள்ள வழியே ற்பட்டுள்ளது.
அத்துடன் யுத்தம் முடிவுக்கு வந்தமை மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் கடன் கிடைத்தமை ஆகியவை முதலீட்டாளர்க ளுக்கு நம்பிக்கையை தோற்றுவித்துள்ளன. அத்துடன் இலங்கை பங்குச் சந்தை 100 சதவீதம் வளர்ச்சி பெற்று உலகின் சிறந்த பங்கு சந்தைகளில் ஒன்றாக உள்ளது.
2009ஆம் ஆண்டு நவம்பர் மாத மளவில் 5 பில்லியன் அமெரிக்க டொலர்களை விட அதிகமான வெளிநாட்டு சேமிப்பு இருந்ததாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப் பட்டுள்ளது. இது 6 மாதங்களுக்கு மேற்பட்ட இறக்குமதிக்கு போதுமா னது என்று போர்ப்ஸ் சஞ்சிகை மேலும் கூறியுள்ளது.
யுத்தத்துக்கு மத்தியிலும் மொத்த உள்ளூர் உற்பத்தி சராசரி கடந்த 10 வருடங்களாக 5 சதவீத அளவில் இருந்தது.
தற்போது உணவு பதப்படுத்தல், ஆடைகள் மற்றும் புடைவை, உணவு மற்றும் பானங்கள், துறை முக நிர்மாணம், தொலை தொடர்பு காப்புறுதி மற்றும் வங்கி ஆகிய துறைகளை இலங்கையின் வர்த்தக நடவடிக்கைகள் மையப்படுத்தப் பட்டுள்ளன என்று போர்ப்ஸ் சஞ் சிகை மேலும் கூறுகிறது
0 commentaires :
Post a Comment