நாட்டின் முக்கியமானதொரு வாக்கெடுப்பு நடைபெறுகின்ற நிலையில் அதற்கு ஆதரவு தெரிவிப்பதா இல்லையா என்பது குறித்த முக்கிய கூட்டத்தினை தமிழ் தேசியக் கூட்டமைப்பு நேற்றைய தினம் கொழும்பில் நடத்தி அதில் வாக்;கெடுப்புக்கு ஆதரவு தெரிவிப்பதில்லை என முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த முடிவெடுத்தலில் தலைவர் இரா.சம்பந்தன், சி.யோகேஸ்வரன், செல்வம் அடைக்கலநாதன், சிறிதரன், வினோதராதலிங்கம், ஆகியோர் கலந்து கொள்ளவில்லை. சம்பந்தன் மற்றும் அடைக்கலநாதன் ஆகியோர் இந்தியாவிலும், யோகேஸ்வரன் லண்டனிலும், சிறிதரன் ஜேர்மனியிலும், வினோதராதலிங்கம் மன்னாரிலும் உள்ள நிலையில் இந்த முக்கிய கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இவர்களுடன் தொலைபேசியில் கலந்துரையாடியே இந்த முடிவு எடுக்கப்பட்டதாக பா.உ. அரியநேத்திரன் தெரிவித்துள்ளார். இது இவ்வாறிருக்க நாளைய தினம் காலை ஜேர்மனியில் நடக்கவுள்ள உலகத்தமிழ்ர் பண்பாட்டு மாநாட்டில் கலந்து கொள்வதற்காக மேலும் நான்கு பாராளுமன்ற உறுப்பனர்கள் ஜேர்மன் பயணமாகவுள்ளனர். எனவே அரசுக்கு எதிராக வாக்களிப்பது என முடிவு எடுக்கப்பட்டாலும் அல்லது கலந்து கொள்வதில்லை என முடிவெடு;தாலும் நடைபெறவுள்ள வாக்கெடுப்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் ஏழு பாராளுமன்ற உறுப்பினர்களே கலந்து கொள்ளவுள்ளதாகத் தெரியவருகிறது. இது தொடர்பாக கருத்து வெளியிட்ட பெயர்குறிப்பிடவிரும்பாத அக்கட்சியின் பா.உ ஒருவர், த.தே.கூ. ஒட்டுமொத்தமாக எதிர்ப்பதாக இருந்தால் வாக்களிப்பில் அனைவரும் கலந்துகொள்ள வேண்டும். சிலர் வெளிநாடுகளில் இருந்துக் கொண்டும் சிலர் வெளிநாடு செல்லவுள்ள நிலையிலும் எதிராக வாக்களிப்பது என முடிவு செய்யப்பட்டுள்ளது. ஒன்று வாக்களிப்பில் கலந்துகொள்ளாவிட்டாலோ, எதிராக வாக்களிப்பது குறித்தோ தெரியப்படுத்த வேண்டும். வெளிநாடு செல்லவிருக்கின்ற நிலையில் வாக்களிப்பில் கலந்து கொள்வது ஏனையவர்களைக் காட்டிக்கொடுக்கும் செலாகும். இதேநேரம் நானும் வெளிநாடு செல்ல நேரிடலாம் என்றார். நேற்றைய கூட்டத்தில் இதே போல மேலும் பல பாராளுமன்ற உறுப்பினர்கள் வாக்களிப்பில் கலந்து கொள்ளாமல் இருப்போம் என தெரிவித்ததாகவும் ஆனால் அதற்கு எதிராக முடிவு செய்யப்பட்டதாகவும் தெரியவருகிறது. நேற்றை கூட்டம் நடைபெறுவதற்கு முன்னர் கருத்து தெரிவித்திருந்த அரியநேத்திரன், முஸ்லிம் காங்கிரஸ் ஆதரிக்கிறது என்பதால் நாங்கள் ஆதரிக்கவோ, ஐக்கிய தேசியக்கட்சி எதிர்க்கிறது என்பதால் எங்களால் எதிர்க்கவோ முடியாது எனத் தெரிவித்திருந்தார். இதே போல முக்கியமாக வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாது பலர் வெளிநாட்டில் இருப்பதும், வெளிநாடு செல்வ இருப்பதும் வருத்தத்திற்கும், வேதனைக்குமுரியது என்பதுடன் தமிழ் மக்களை புறந்தள்ளும் செயலாகும் என புத்திஜீவிகள் தெரிவிக்கின்றனர். |
9/08/2010
| 0 commentaires |
0 commentaires :
Post a Comment