9/28/2010

அமெரிக்காவின் வேண்டுகோளை இஸ்ரேல் நிராகரிப்பு யூதக்குடியேற்றங்களைத் தொடர அனுமதி

இஸ்ரேல் யூதக் குடியேற்றத்தின் தற்காலிக நிறுத்தம் மேலும் நீடிக்கப்பட வேண்டுமென்ற அமெரிக்காவின் வேண்டுகோளை நிராகரித்த இஸ்ரேல் மீண்டும் குடியேற்ற வேலைகளைத் தொடர அனுமதியளித்ததுடன் பலஸ்தீனர்களை நேர்மையான பேச்சுவார்த்தைக்கு வருமாறு துரிதப்படுத்தியது.
இஸ்ரேல், பலஸ்தீன நேரடிப் பேச்சு வார்த்தைகள் ஆரம்பமானதையிட்டு மேற்குக் கரை, கிழக்கு ஜெரூஸலம் போன்ற பிரதேசங்களில் இஸ்ரேல் நிறுவி வந்த யூதக்குடியேற்ற வேலைகள் பத்து மாதங்களுக்கு தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டன. இதன் கால எல்லை இம் மாதம் 26 ஆம் திகதியுடன் முடிவடைந்தது.
எனவே மீண்டும் இக் குடியேற்றங்களைத் தொடர அனுமதியளித்துள்ள இஸ்ரேல் பலஸ்தீனர்களைத் தொடர்ந்தும் பேச்சுவார்த்தைக்கு வருமாறு அழைப்பும் விடுத்தது. இது தொடர்பாக இஸ்ரேலின் பிரதமர் பென்ஜெமின் நெதன்யாஹு தெரிவித்ததாவது:- யூதக்குடியேற்ற வேலைகளைத் தொடர்ந்து கொண்டு எதிர்காலப் பேச்சுவார்த்தைகளில் தீர்வைப் பெற இஸ்ரேல் தயாராகவுள்ளதாகவும் இதற்கான அறிவுரைகளை வழங்கப் போவதாகவும் இஸ்ரேல் அதிகாரிகள் தெரிவித்தனர்.
என்னவகையிலேனும் யூதக்குடியேற்றங்கள் தொடர்ந்தால் பேச்சுக்கள் சாத்தியமில்லையென்பதை பலஸ்தீன ஜனாதிபதி மஃமூத் அப்பாஸ் திட்டவட்டமாக அறிவித்தார். இந் நிலையில் யூதக்குடியேற்றக் கொள்கையில் அமெரிக்காவின் நிலைப்பாடுகள் மாறவில்லை.
பேச்சுவார்த்தைகள் இனி வருங்காலங்களில் தொடர்ந்தால் இருதரப்பினரையும் இணக்கப்பாட்டுக்குக் கொண்டுவர முயற்சிப்போம் என வெள்ளை மாளிகையின் பேச்சாளர் குரொளஸி தெரிவித்தார். இரண்டு நாடுகள், இரண்டு தீர்வுகள் என்ற இலட்சியத்தின் அடிப்படையில் பேச்சுவார்த்தைகள் வெற்றி பெற முயற்சிப்போம் என்றார் ஹிலாரி கிளிண்டன்.

0 commentaires :

Post a Comment