9/02/2010

தென்னாபிரிக்காவில் வேலைநிறுத்தம் இயல்புநிலை பெரிதும் பாதிப்பு

தென்னாபிரிக்காவில் தொடரும் வேலைநிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வருமாறு அந்நாட்டின் ஜனாதிபதி ஜகோப்சுயுமா வேண்டிக்கொண்டதற்கிணங்க பேச்சுவார்த்தைகள் ஆரம்பமாகின. அரசாங்கத்துக்கும், தொழிலாளர் யூனியனுக்குமிடையே இப் பேச்சுவார்த்தைகள் நேற்று முன்தினம் நடந்தன.
தொழிலாளர்களின் ஊதியத்தை ஒருவீதத்தால் அதிகரிப்பதென்றும் வீட்டுத் திட்டத்துக்கான மாதாந்த நன்கொடைகளை உயர்த்துவதென்றும் பேச்சுவார்த்தையின் போது முடிவுசெய்யப்பட்டது.
தென்னாபிரிக்காவில் மூன்று வாரங்களாகத் தொடர்ந்த வேலைநிறுத்தத்தினால் இயல்பு நிலை பாதிக்கப்பட்டன. வைத்தியசாலைகள், பாடசாலைகள், அரச அலுவலகங்கள், போக்குவரத்துகள் இயங்கவில்லை. இதனால் தென்னாபிரிக்காவின் பொருளாதாரம் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டது.
இதையடுத்தே தொழிலாளர்களின் பிரச்சினைகளை முடித்துவைக்க பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்கும்படி ஜனாதிபதி உத்தரவிட்டார். பேச்சுவார்த்தைக்கு முன் னுரிமை கொடுத்து புதிய திட்டங்களை மேசைக்கு கொண்டுவந்துள்ளதாக தென்னாபிரிக்காவின் பொது நிர்வாக சேவைகள் அமைச்சர் சொன்னார்.

0 commentaires :

Post a Comment