வடக்கு, கிழக்கில் சர்வதேச விளையாட்டு மைதானங்களை அமைப்பதற்கான பூர்வாங்க ஏற்பாடுகள் தற்போது உயர் மட்டத்தில் இடம்பெற்று வருகின்றன.
வடக்கு, கிழக்கில் யுத்தம் தற்போது முடிவுற்ற நிலையில், அப்பகுதிகளில் விளையாட்டுகளில் பங்குபற்றும் வீரர்களின் ஆர்வம் மிகவும் மும்முரம் அடைந்துள்ளதால், சர்வதேச தரத்தில் விளையாட்டு ¨தானங்களை அமைத்து பின்தங்கிய பிரதேசங்களில் காணப்படும் விளையாட்டு வீரர்களை சர்வதேச தரத்தில் உள்ள வீரர்கள் போன்று திறம்பட விளையாட்டுக்களில் பயிற்சி அளிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கிழக்கு மாகாணத்தில் திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் இச் சர்வதேச மைதானங்களை நிறுவுவதற்கு ஆரம்ப கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
இம்மாகாணங்கள் இரண்டிலும் சர்வதேச விளையாட்டு மைதானங்கள் நிறுவுவதன் மூலம் இப்பகுதியில் பொருளாதார ரீதியில் முன்னேற்றம் அடைவதற்கும் வாய்ப்பு உண்டு.
எது எப்படியோ, சர்வதேச ரீதியான மைதானங்களின் அவசியம் தற்போது உணரப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது.
மைதானங்கள் அமைக்கப்பட்டால் மறைமுக, நேரடியான தொழில் வாய்ப்புகளும் கொடுக்கப்பட வேண்டும்.
0 commentaires :
Post a Comment