ஹிஜ்ரி 1431 ஷவ்வால் மாதத்திற் கான தலைப்பிறை நாட்டின் பல பாகங்களில் தென்பட்டதாக ஊர் ஜிதம் செய்யப்பட்டதை அடுத்து ‘ஈதுல் பித்ர்’ நோன்புப் பெருநாள் இன்று (10) வெள்ளிக்கிழமை கொண் டாடு வதென கொழும்பு பெரிய பள்ளிவாசல் அகில இலங்கை ஜம் இய்யதுல் உலமா ஆகியன இணைந்து உத்தியோக பூர்வமாக அறிவித்துள்ளன.
ஷவ்வால் மாதத்திற்கான தலைப்பிறை தீர்மானிக்கும் மாநாடு நேற்று மஃரிப் தொழுகையைத் தொடர்ந்து கொழும்பு பெரிய பள்ளிவாசலில் அமைந்துள்ள மத்ரஸதுல் ஹமீதிய்யா மண்டபத்தில் நடைபெற்றது.
மூதூர், கிண்ணியா, சிலாவத்துறை, புல்மோட்டை போன்ற பிரதேசங்களில் தலைப்பிறை கண்டதாக ஊர்ஜிதம் செய்யப்பட்டதை அடுத்து கொழும்பு பெரிய பள்ளிவாசலின் பிறைக் குழுத் தலைவர் மெளலவி ஏ. டபிள்யூ. எம். ரியாழ் (பாரி), அகில இலங்கை ஜம் இய்யதுல் உலமா தலைவர் மெளலவி எம். ஐ. எம். ரிஸ்வி முப்தி ஆகியோர் ஏகமனதாக இந்தத் தீர்மானத்தை அறிவித்தனர்.
முஸ்லிம் சமய கலாசார திணைக்களத்தின் பணிப்பாளர் அஷ்ஷெய்க் வை. எல். எம். நவவி, கலீபதுஷ்ஷாதுலி மெளலவி ஜே. அப்துல் ஹமீத் (பஹ்ஜி), ஷரீஆ கவுன்ஸில் பொதுச் செயலாளர் மெளலவி எம்.பி.எம். ஹிஷாம் (பத்தாஹி) உட்பட உலமாக்கள், கதீப்மார்கள், ஜும்ஆப் பள்ளிவாசல் நிர்வாகிகள், ஜம்இய்யதுல் உலமா, முஸ்லிம் சமய கலாசார திணைக்கள அதிகாரிகள், ஸாவியாக்கள், தக்கியாக்களின் பிரதிநிதிகள் ஆகியோர் இந்த மாநாட்டில் கலந்துகொண்டனர்.
0 commentaires :
Post a Comment