இந்தியாவில் முதல் முறையாக தலைநகர் டெல்லியில் வருகிற 3ந் திகதி முதல் 14ந் திகதி வரை பொதுநலவாய விளையாட்டு போட்டிகள் நடைபெறுகிறது. இதில் மொத்தம் 71 நாடுகள் பங்கேற்கின்றன.
ஊழல், போட்டி ஏற்பாடுகளில் தாமதம், பொதுநலவாய கிராமத்தில் உள்ள குடியிருப்புகளில் சுகாதார சீர்கேடு என்று பல்வேறு குற்றச்சாட்டுகள் பற்றி ஒரு பக்கம் காரசாரமாக விவாதிக்கப்பட்டாலும், மறுபுறம் வெளிநாட்டு அணி வீரர்கள் தொடர்ந்து டெல்லி வருகை தந்த வண்ணம் உள்ளனர்.
அவுஸ்திரேலியா, கனடா, இங்கிலாந்து, தென் ஆபிரிக்கா, ஸ்கொட்லாந்து உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த சுமார் 550 வீர - வீராங்கனைகள், அதிகாரிகள் பொதுநலவாய போட்டியில் பங்கேற்பதற்காக டெல்லி வந்தடைந்தனர்.
இதில் தென் ஆபிரிக்கா தரப்பில் 113 பேரும், அவுஸ்திரேலிய தரப்பில் 59 பேரும், இங்கிலாந்து அணியில் 61 பேரும் இடம் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
பொதுநலவாய குடியிருப்பு கிராமத்தில் தங்கள் நாட்டு வீரர்களுக்கு ஒதுக்கப்பட்ட அறை ஒன்றில் பாம்பை கண்டதாக பரபரப்பை ஏற்படுத்திய இந்தியாவுக்கான தென் ஆபிரிக்க தூதர் ஹாரிஸ் மெபுல்லோ மெஜகி, இப்போது திருப்தி அடைந்துள்ளார்.
அவர் நிருபர்களிடம் கூறுகையில், எங்களுக்கு ஒதுக்கப்பட்ட அறை ஒன்றில் இருந்து பாம்பு வெளிப்பட்டதைப் பார்த்தேன். இதன் மூலம் எங்களது வீரர்களுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டு இருந்ததால் ஏமாற்றம் அடைந்தேன். விடுதியின் அடித்தளம் மற்றும் படிகட்டுகள் முழுவதும் தண்ணீர் மூழ்கி கிடந்தன.
எங்களது மனக்குறையை போட்டி ஒருங்கிணைப்பாளர்கள் தீவிர கவனத்தில் எடுத்துக் கொண்டுள்ளனர். எங்களது வீரர்கள் தங்கும் இடத்தை தயார் செய்து வரும் பணியாளர்கள் மிகச் சிறப்பாக செய்து வருகிறார்கள். இதனால் மகிழ்ச்சி அடைந்துள்ளேன். முன்னர் பார்த்ததை விட இப்போது நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
எல்லா பிரச்சினைகளுக்கும் தீர்வு காணப்பட்டு உள்ளது. பணிகளை துரிதமாக முடித்து வருகிறார்கள். விரைவில் எல்லாம் சரியாகி விடும். அதன் பிறகு எங்களது வீரர்கள் பொதுநலவாய கிராமத்தில் தங்குவார்கள் என்றார்.
இதற்கிடையே இந்தியாவின் அதிக மக்கள் தொகையால் தான் டெல்லியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக பொதுநலவாய விளையாட்டு சம்மேளன த்தின் தலைமை செயல் அதிகாரி மைக் ஹ¥ப்பர் கூறிய புகாருக்கு டெல்லி முதல் மந்திரி iலா தீட்சித் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். ‘அவரது கருத்து உண்மையிலேயே அரசியல் நாகரீகமற்ற இரக்கமற்ற கருத்து’ என்று கண்டித்துள்ளார்.
0 commentaires :
Post a Comment