நியூயோர்க்கில் நடைபெறவுள்ள ஆயுத தவிர்ப்பு மாநாட்டில் ஈரான் ஜனாதிபதி அஹ்மெதி நெஜாத் கலந்துகொள்வாரென ஐ. நா. செயலாளர் பான் கீ மூன் நம்பிக்கை தெரிவித்தார். இம்மாநாடு 24ம் திகதி நடைபெறவுள்ளது.
அடுத்த வாரம் ஐ. நா.வின் பொதுச் சபை நியூயோர்க்கில் கூடவுள்ளது. இதையடுத்து ஆயுத போட்டிகளைத் தவிர்த்து நாசகார நவீன ஆயுதங்களை இல்லாமல் செய்வதற்கான மாநாடும் கூட்டப்படவுள்ளது.
இம்மாநாட்டை ஐ. நா. செயலாளர் பான் கீ மூன் கூட்டவுள்ளார். இதில் ஈரானின் விடயமும் பேசப்படவுள்ளது. சர்வதேச அணு முகவர் அமைப்பின் ஈரான் தொடர்பான அறிக்கையும் இந்த மாநாட்டில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா 24ம் திகதி சூடான் செல்லவுள்ளதால் அவர் இதில் பங்கேற்க மாட்டார்.
ஆனால் ஈரான் ஜனாதிபதி தனது விஜயத்தை உறுதி செய்துள்ளதாக பான் கீ மூனின் பேச்சாளர் சொன்னார். யூரேனியம் செறிவூட்டல் வேலைகளை ஐ. நா. வின் கண்காணிப்பின் கீழ் கொண்டுவர இந்த மாநாட்டில் அஹ்மெதி நெஜாத்துக்கு அழுத்தம் பிரயோகிக்கப்படுமெனவும் எதிர்பார்க்கப்படுகின்றது. இதற்கென பிரத்தியேக சந்திப்பொன்று பான் கீ மூன் அஹ்மெதி நெஜாத்திடையே இடம்பெறவுள்ளது.
0 commentaires :
Post a Comment