9/24/2010

பாரம்பரிய கலை இலக்கியங்களைப் பாதுகாக்க வேண்டிய கடமை எம் ஒவ்வொருவருக்கும் இருக்க வேண்டும். – கிழக்கு முதல்வர்.

 

img_78272மட்டக்களப்பு மாவட்ட செயலக கலாசார அலுவலகம் நடாத்திய மக்கள் கலை இலக்கிய விழா இன்று (22.09.2010) மட் மகாஜன கல்லூரி மண்டபத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் சு. அருமைநாயகம் தலைமையில் இடம் பெற்றது. இந் நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றிய கிழக்கு மாகாண முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமான சி. சந்திரகாந்தன் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து பேசுகையில், ஒவ்வொரு சமுகத்தவர்களுக்கும் ஒவ்வொரு பாரம்பரிய கலை இலக்கிய பண்பாடு கலாசாரம் என குறித்தொதுக்கப்பட்டிருக்கிறது. அதனை அவர்கள் சரியாக பாதுகாத்துக் கொள்ள வேண்டிய பொறுப்பு அவர்களையே சார்ந்தது.
மட்டக்களப்பு மாவட்டத்தினைப் பொறுத்தவரையில், கலை இலக்கியங்கள் என்பது மக்களின் வாழ்வியலோடு பின்னிப் பிணைந்திருப்பது. விசேடமாக குறிப்பிட்ட சில கலைகளுக்கு மட்டக்களப்பு பெயர் போனது. கடந்த கால அசாதாரண சூழல் மற்றும் தற்போதைய நவீன யுகம் இவற்றிற்கிடையில் கலை இலக்கியங்கள் பாதுகாப்பதென்பது சவாலன விடயம்தான். இருந்த போதும் நகர்ப்புறங்களிலும் கிராமப் புறங்களிலும் இவ்வாறான கலை இலக்கிய நிகழ்வுகளை ஏற்படுத்த வேண்டும். அத்தோடு இது சார்நத பல போட்டிகளை நடாத்தி பரிசில்கள் வழங்க வேண்டும். அவ்வாறே மக்களுக்கும் இதன் முக்கியத்தவத்தையும் எமது பாரம்பரியங்கள் கலாசாரங்களையும் தெளிவுபடுத்த வேண்டும். இதற்காக கிழக்கு மாகாண சபையுடன் இனைந்து அதிகாரிகள் மற்றும் கலைஞர்கள் ஒத்துழைக்க வேண்டும் எனவும் அவர் தனதுரையில் குறிப்பிட்டார்.
இந் நிகழ்வில் மட்டக்களப்பிற்கே உரித்தான பல கலைநிகழ்வுகள் அரங்கேற்றப்பட்டன.  கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பூ. பிரசாந்தன், மூத்த பல கஞைர்கள், கிழக்கு மாகாண கலாசார பணிப்பாளர் யூ. கே. வெலிக்கல, மட்டக்களப்பு மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் இரா நெடுஞ்செலியன், கலாசார உத்தியோகஸ்த்தர் மலர்ச்செல்வன் அகியோரும் கலந்து கொண்டார்கள்.
img_78352
img_78442
img_78942
img_79102

0 commentaires :

Post a Comment