நினைவு தினம் இன்று
கிழக்கிழங்கை முஸ்லிம் அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு பிரதேசமாகும். முஸ்லிம்கள் அடர்த்தியாகவும் செறிவாகவும் வாழும் இப்பிரதேசமானது தனது வரலாற்றில் தனக்கென தனித்துவமிக்க தலமைத்துவத்தை உருவாக்கி வரலாறு படைத்துக்கொண்டது. இவ்வரலாறு என்பது அஷ்ரஃப் எனும் பெரும் ஆளுமையாகும்.
இலங்கை அரசியலில் அஷ்ரஃப் ஏற்படுத்திய அதிர்வுகள் சிறுபான்மைச் சமூகம் ஒற்றுமைப்பட்டால் எதையும் சாதித்துக்காட்ட முடியும் என்பது நிரூபிக்கப்பட்டது.
கிழக்கில் புகழ்பூத்த குடும்பத்தில் அஷ்ரஃப் பிறந்தார். கல்வி பயின்ற காலத்தில் சாரணத் தலைவராகவும் இளைஞர் மன்றத் தலைவராகவும் தமிழ் சங்கத் தலைவராகவும் முதலுதவிச் சங்கத் தலைவராகவும் பல பொறுப்புக்களை வகித்து தலைமைத்துவ பண்புகளை இள வயதில் வளர்த்துக்கொண்டார். அஷ்ரஃப் அவர்களின் அரசியல் தலைமைத்துவம் திடீரென நிகழ்ந்த ஒன்றல்ல. இவரது தலைமைத்துவம் படிப்படியாகவே உருவாகி வெளிப்பட்டது என்பதனை எம்மால் அறிய முடிகிறது.
ஒரு சட்டத்தரணியாகத் தனது வாழ்க்கையைத் தொடங்கி 1984 களில் இலங்கையில் முதன் முத லாக அன்றைய ஐக்கிய தேசியக் கட்சி அரசினால், இனப் பிரச்சினைத் தீர்வுக் கான வழி வகைகளைத் தேடும் சர்வகட்சி மாநாட் டில் முன்னாள் கல்வியமைச் சர் கலாநிதி பதியுதீன் மஃமூத் தலமையிலான முஸ்லிம் கவுன்ஸில் சார் பாக கிழக்கை பிரதிநிதித் துவப்படுத்தி மாநாட்டில் கலந்துகொண்டதன் மூலம் தேசிய மட்டத்திலும் சர்வ தேச மட்டத்திலும் அஷ்ரஃப் அவர்கள் பிரபல்யத்தைப் பெற்றுக்கொண்டார்.
முஸ்லிம்களை ஒரு நிலை ப்படுத்தி அரச அரங்கில் முதன்மையிடத்தில் இருக்கச் செய்தவர் அஷ்ரஃப். முஸ்லிம்கள் அரசியலில் கெளரவமாக நடத்தப்படவேண்டும். என்பதனை உறுதி செய்ததுடன் நாடு பூராவும் பிரிந்து வாழும் முஸ்லிம்களை ஒரு தலைமையின் கீழ் ஒன்றுபட்டு உழைப்பதன் மூலம் உச்சப் பயனை அடைய முடியும் என்பதனை நிரூபித்துக் காட்டினார்.
இலங்கை முஸ்லிம்களின் அரசியல் வரலாற்றில் வேறு எந்த முஸிலிம் தலைவர்களும் துணியத் தயங்கிய கைங்கரியத்தை அஷ்ரப் அவர்கள், முன்னின்று நடத்தியபோது முஸ்லிம் மக்களின் நன்மதிப்பையும் அங்கீகாரத்தையும் பெற்ற ஒரு முஸ்லிம் தலைவன் என்ற அந்தஸ்தைப் பெற்றுக்கொண்டார்.
இற்றைக்கு இருபத்திநான்கு வருடங்களுக்கு முன் (1986.11.29) கொழும்பு பாஷா விழாவில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்ற சமூக நிறுவனத்தை ஒரு அரசியல் கட்சியாக பிரகடனம் செய்து வைத்தார். அக்கட்சியின் தோற்றத்தை ஜீரணிக்க முடியாத அன்றைய முஸ்லிம் அரசியல்வாதிகள் அஷ்ரஃப் அவர்களை இனவாதி என்றும் முஸ்லிம் காங்கிரஸ் ஒரு இனவாதக் கட்சியென்றும் தூற்றித்திரிந்தனர்.
அஷ்ரஃப் அவர்களின் நெஞ்சுறுதி ஆழமான அனுபவம் தீர்க்கமான அறிவு அழுத்தமான கொள்கைப் பிடிப்பு பேரினவாதிகளினதும் அவர்களது அரசியல் ஏஜன்டுகளாகத் தொழிற்பட்ட முஸ்லிம் அரசியல்வாதிகளும் மேற்கொண்ட விசமப் பிரச்சாரங்களை முறியடிக்க உதவியது.
முஸ்லிம்கள் ஒரு தனிப்பட்ட சமூகமல்ல தமிழினத்தின் ஓர் அங்கம், தமிழ் பேசுவதால் நாம் எல்லோரும் தமிழர்கள்கள், தமிழ் பேசும் கிறிஸ்தவர்களைப் போல் தமிழ் பேசும் இஸ்லாமியர்கள் என்று நூற்றாண்டு காலமாக முன்வைக்கப்பட்டு வந்த வாதத்தை மறுதலித்து நின்ற அஷ்ரஃப் அவர்கள் இந்த நாட்டில் வாழும் தமிழ் பேசும் மக்களின் பிரிக்க முடியாத அங்கமே முஸ்லிம் சமூகம்.
இச்சமூகத்தின் உணர்வுகளும் அபிலாசைகளும் தமிழினத்தின் உணர்வுகளில் இருந்து வேறுபட்டவை. எனவே முஸ்லிம் சமூகத்தின் தனித்துவத்தை அங்கீகரிக்க வேண்டும் என்று குரல் கொடுத்ததுடன் அதை அங்கீகரிக்கவும் செய்தார்.
நாடாளுமன்ற உறுப்பினராக எதிரணி அரசியலில் ஆறு வருடங்களையும் பொதுஜன முன்னணி அரசாங்கத்தின் அமைச்சராக ஆறு வருடங்கள் மாத்திரமே பாராளுமன்ற அரசியல் செய்ய அவரால் முடிந்தது.
அமைச்சராக இருந்த காலத்தில் கட்சி வேறுபாடு, இன வேறுபாடுகளுக்கு அப்பால் நாட்டுக்கும் குறிப்பாக முஸ்லிம் சமூகத்திற்கும் உன்னதமான சேவை புரிந்தார். சாதாரண மக்களின் பிரச்சினைகளை அவர்களது தேவைகளை அபிலாஷைகளை நன்கறிந்து அரசியல் பணி புரிந்த பெருமைக்குரியவர் அவர். அவரது இழப்பு இந்நாட்டுக்கும் குறிப்பாக முஸ்லிம் சமூகத்திற்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும்.
0 commentaires :
Post a Comment