9/07/2010

சகாயமணியை கண்டு பிடிக்க நடவடிக்கை: சிவகீதா _

கடத்தப்பட்ட மட்டக்களப்பு மாநகர சபை உறுப்பினர் பி.சகாயமணியை கண்டுபிடிக்க உடனடி நடவடிக்கை எடுக்குமாறு மாநகர மேயர் சிவகீதா பிரபாகரன் கிழக்கு பிராந்திய பிரதி பொலிஸ்மா அதிபர் விஜய குணவர்த்தனவை சந்தித்து இன்று நண்பகல் பேச்சு நடாத்தினார்.

பிரதி பொலிஸ் மா அதிபரின் மட்டக்களப்பு பணிமனையில் நடைபெற்ற சந்திப்பில் பிரதி மேயர் ஜோர்ஜ் பிள்ளை மாநகரசபை உறுப்பினர்hள் கடத்தப்பட்ட மாநாரசபை உறுப்பினரின் மனைவி ஆகியோரும் கலந்து கொண்டனர். தொடர்ந்து புலனாய்வு செய்துவருவதாகவும் பொதுமக்களிடமிருந்து தகவல்கள் கிடைக்கும் பட்சத்தில் இலகுவாக கண்டுபிடிக்க முடியுமெனவும் பிரதி பொலிஸ்மா அதிபர் தெரிவித்தார்.

0 commentaires :

Post a Comment