9/27/2010

அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான போட் சதுரங்க போட்டியில் கிழக்கு மாகாணம் இரண்டாம் இடம்

கல்வி அமைச்சு நடத்திய அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான போட் சதுரங்க போட்டியில் கிழக்கு மாகாணத்தில் இருந்து கலந்து கொண்ட கல்முனை ஸாஹிரா தேசியக் கல்லூரி மாணவன் தேசிய ரீதியில் இரண்டாம் இடத்தைப் பெற்றுக் கொண்டார்.
நீர்கொழும்பு லோயலா கல்லூரி மண்டபத்தில் கடந்த வாரம் நடைபெற்ற மேற்படி போட்டி நிகழ்ச்சியில் கலந்துகொண்ட கல்முனை ஸாஹிரா தேசியக் கல்லூரி மாணவன் ஏ. எச். றிப்கி றிகாஸ் இரண்டாம் இடத்தைப் பெற்றுக்கொண்டார். இவர் இக் கல்லூரியில் தரம் 10 இல் கல்வி பயின்று வருகின்றார்.
இப் போட்டியில் முதலாம் இடத்தை வித்யாதா கல்லூரி மாணவன் கே. ஏ. பி. எம். ஆரியவசமும், மூன்றாவது இடத்தை யாழ்ப்பாணம் ஹாட்டி கல்லூரி மாணவன் ஆர். திருபரனும் பெற்றுக்கொண்டனர்.
கல்முனை ஸாஹிரா தேசியக் கல்லூரி மாணவர்களுக்கும், இவர்களுக்கு பயிற்சியினை வழங்கிய ஆசிரியர்களான அலியார் ஏ. பைஸர் மற்றும் எம். ஏ. சலாம் ஆகியோருக்கு கல்லூரி அதிபர் எம். எம். இஸ்மாயில் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளார்.

0 commentaires :

Post a Comment