இன்றைய அரசியல் அரங்கில் ஐக்கிய தேசியக் கட்சியே பிரதான பேசு பொரு ளாக இருக்கின்றது. கட்சியின் உட்பிரச் சினை நீண்டகாலமாக ஊடகங்களில் முக் கிய இடத்தைப் பெற்று வந்த போதிலும் இப்போது பிரதான இடத்தைப்பெறும் அளவுக்கு வளர்ந்துவிட்டது. பதினெட்டாவது அரசியலமை ப்புத் திருத்த வாக் கெடுப்பின்போது ஐக்கிய தேசியக் கட்சியின் ஆறு பாராளுமன்ற உறுப்பினர்கள் திருத்தத்துக்கு ஆதரவாக வாக்களித்து அரசாங்கத்துடன் இணைந்தனர்.
பாராளுமன்றத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் சின்னத்தில் போட்டியிட்ட அதன் நேச அணியான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பதினெட்டாவது அரசியலமைப்புத் திருத்தத்தை ஆதரிப்பதென ஏற்கனவே முடிவு செய்ததன் மூலம் ஐக்கிய தேசியக் கட்சியுடனான உறவை முறித்துக்கொண்டுவிட்டது.
இப்போது ஐக்கிய தேசியக் கட்சியின் இருபத்தைந்து பாராளுமன்ற உறுப்பினர்கள் கட்சித் தலைமைக்குக் காலக்கெடு விதித்தி ருக்கின்றார்கள். ஒருவார காலத்துக்குள் கட்சியின் உட்பிரச்சினையை முடிவுக்குக் கொண்டு வராவிட்டால் சுதந்திரமாக செயற் படப்போவதாக இவர்கள் கூறுகின்றார்கள்.
கட்சித் தலைமையின் அதிகாரத்தை நிராகரி த்துச் செயற்படப் போகின்றார்கள் என்பதே இதன் அர்த்தம். உட்பிரச்சினைக்குச் சுமுக மான முடிவைக் காணத் தவறும் பட்சத்தில் கட்சி பாரிய பிளவை நோக்கி நகர்வதைத் தவிர்க்க முடியாமலாகிவிடும்.
சுதந்திர இலங்கையின் முதலாவது அரசாங் கத்தை அமைத்த கட்சி என்ற பெருமையை மாத்திரமன்றி இலங்கையில் கூடுதலான காலம் ஆட்சிப் பொறுப்பை ஏற்றிருந்த கட்சி என்ற பெருமையையும் ஐக்கிய தேசியக் கட்சி கொண்டிருக்கின்றது. இந்தக் கட்சிக்கு இன்று ஏன் இந்த நிலை என்ற கேள்வி எழுவதில் நியாயம் உண்டு.
ரணில் விக்கிரம சிங்ஹ கட்சித் தலைமையை ஏற்ற பின்னரே கட்சிக்குத் தேய்வு ஏற்பட்டது என்றும் அவர் தலைமையிலிருந்து வெளியேறினால் கட்சி யைக் கட்டி வளர்க்க முடியும் என்றும் கட்சிக்குள் அபிப்பிராயம் நிலவுகின்றது. இவரது தலைமையின் கீழ் அடுத்தடுத்துப் பதினாறு தேர்தல்களில் தோல்வியுற்றதால் இந்தக் கருத்தை நிராகரிக்க முடியாத போதிலும் இதுவே தனியான காரணம் எனக் கூறுவதற்கில்லை.
ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்றப் பலம் 1956ம் ஆண்டு எட்டுப் பேராக வீழ்ச்சியடைந்ததை இங்கு குறிப்பிட லாம். தலைமைப் பலவீனத்துடன் சமூக பொருளாதாரக் காரணிகளும் ஐக்கிய தேசியக் கட்சியின் இறங்குபடிக்கு வழி வகுத்திருக்கின்றன.
ஐக்கிய தேசியக் கட்சி அதன் ஆரம்ப நாட்களில் வரித்துக்கொண்ட ஏகாதிபத்திய சார்பு வலதுசாரிக் கொள்கை நாட்டின் அன்றைய சூழ்நிலையில் அக் கட்சிக் குச் சாதகமான பலனைத் தந்தது.
காலப் போக்கில் இலங்கையின் அரசுவழிச் சமூகம் பெருமளவில் ஏகாதிபத்திய எதிர்ப்பு நிலை யையும் முற்போக்கு சார்ந்த கருத்து நிலை யையும் கொள்ளத் தொடங்கியதால் ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவுத் தளம் சுருங் கியது.
இந்த நிலையில் கட்சியின் தலைமை மாற்றத்துக்கேற்ப மாறுவதாகப் பாசாங்கு செய்து அதிகாரத்தைத் தக்க வைத்துக் கொண்ட போதிலும், ரணிலின் தலைமையில் ஐக்கிய தேசியக் கட்சி வெளி ப்படையா கவே ஏகாதிபத்திய மற்றும் சியோனிஸ சக்திக ளுக்குச் சார்பான நிலைப் பாட்டை மேற் கொண்டது. இதுவும் சரிவுக்கு ஒரு காரணம்.
ஒரு காலத்தில் ஐக்கிய தேசியக் கட்சி கொண்டிருந்த வலுவான சிறுபான்மையின ஆதரவுத் தளம் சிறுபான்மையினரின் பிரச்சி னைகள் தொடர்பாக அக்கட்சி மேற்கொண்ட சந்தர்ப்பவாத நிலைப்பாடுகள் காரணமாகச் சிதைவுறத் தொடங்கியது.
ஐக்கிய தேசியக் கட்சியின் தேய்வுக்கு இவை போன்ற பல கார ணங்களைக் கூறலாம். எனவே, சரிந்து விழும் கட்சியைத் தலை வரை மாற்றுவதன் மூலம் மாத்திரம் நிமிர்து வது சாத்தியமில்லை. கொள்கை ரீதியான மாற்றமும் மக்கள் எங்கே செல்கின் றார்கள் என்பதைச் சரியாகப் புரிந்துகொள்ளும் திறனும் கட்சியை நிமிர்த்துவதற்கு அவசியமானவை.
0 commentaires :
Post a Comment