மட்டக்களப்பு மாநகர சபையினால் நிர்மானிக்கப்பட்டுள்ள சுற்றுலாத்தகவல் நிலையத்தினை பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச இன்று காலை திறந்து வைத்தார்.
இதை திறந்து வைக்கும் வைபவத்தில் அனர்த்த நிவாரன சேவைகள் அமைச்சர் பௌசி மற்றும் கிழக்கு மகான முதலமைச்சர் சந்திரகாந்தன் மற்றும் பிரதியமைச்சர்களான ஹிஸ்புல்லா, விநாயகமூர்த்தி முரளிதரன் கிழக்கு மாகாண அமைச்சர்கள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள் மாகாண ஆளுனர் அல்மிரட் மொஹான் விஜே விக்ரம உட்பட மட்டக்களப்பு மாநகர சபை மேயர் பிரதி மேயர் உறுப்பினர்கள் இதில் கலந்து கொண்டனர்.
சுற்றுலா தகவல் நிலையத்தினை திறந்து வைத்து அதன் நினைவுக்கல்லையும இதன்போது திரை நீக்கம் செய்து வைத்தனர்.
இதையடுத்து அமைச்சர் பசில் ராஜபக்ச மட்டக்களப்பு வாவியில் நடைபெற்ற தோணி ஓட்டத்தினை ஆரம்பித்து வைத்தார். இதன் பின்னார் மட்டக்களப்பு பாலமீன் மடுவில் அமைக்கப்பட்டுள்ள சூழல் கற்கை நிலையம் மற்றும் சுற்றுலாத்துறையினரை கவரும் உல்லாசத்தீவு என்பவற்றையும் அமைச்சர் பசில் ராஜபக்ச திறந்து வைத்தார்.நெக்டப் திட்டத்தின் மூலம் இவை நிர்மானிக்கப்பட்டுள்ளன.
0 commentaires :
Post a Comment