9/10/2010

மட்டக்களப்பு மாவட்டத்தில் வீடு,கிணறு இல்லாதோருக்கு மாகாண அமைச்சு உதவி.

இல்லாதோருக்கு மாகாண அமைச்சு உதவி.

img_6189
கிழக்கு மாகாணத்தில்  வீடு, கிணறு இல்லாதோருக்கு வீடுகள், கிணறுகள் அமைத்துக் கொடுக்கும் முயற்சியினை கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி நீர்ப்பாசணம் மற்றும் கிராமிய மின்சார அமைச்சு மேற்கொண்டு வருகின்றது.  முதற்கட்டமாக திருகோணமலை மாவட்டத்தில் வீடுகள் கிணறுகள் இல்லாதோருக்கு காசோலைகள் வழங்கும் நிகழ்வு மாகாண அமைச்சின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. இன்று(08.09.2010) மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள பயனாளிகளுக்கு காசோலைகள் வழங்கும் நிகழ்வு மாகாண அமைச்சர் எம். எஸ் உதுமாலெவ்வே தலைமையில் இடம்பெற்றது. முதற்கட்டமாக 30பேருக்கு கிணறுகளும் 25பேருக்கு வீடுகளும் கட்டுவதற்கான காசோலைகள் வழங்கி வைக்கப்பட்டன. மிகவும் வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழ்கின்றவர்களுக்கே மேற்படி உதவி வழங்கப்பட்டது. இந் நிகழ்வில் கிழக்கு மாகாண முதலமைச்சர் சி. சந்திரகாந்தன், கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான நாகலிங்கம் திரவியம், எட்வின் சில்வா கிருஸ்ணானந்தராஜா, பூ. பிரசாந்தன், கோரளைப்பற்று பிரதேச சபைத் தவிசாளர் தா. உதயஜீவதாஸ் ஆகியோர் கலந்து கொண்டு காசோலைகளை வழங்கி வைத்தார்கள். மேற்படி நிகழ்வு வாழைச்சேனை பேத்தாழையில் அமைந்து

0 commentaires :

Post a Comment