உலக சுற்றுலா தினத்தையொட்டி பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஸ நாளை 26ம் திகதி மட்டக்களப்பு மாவட்டதிதிற்கு விஜயம் செய்கிறார். அன்றைய தினம் சுமார் 10 கோடி ரூபாய் செலவிலான அபிவிருத்திப்பணிகளை அவர் ஆரம்பித்து வைப்பார்.
ஆசிய அபிவிருத்தி வங்கியின் நெக்டெப் திட்டத்தின் கீழ் நிதி ஒதுக்கீட்டிலிருந்து இவ்அபிவிருத்தி பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
மட்டக்களப்பு நகரில் சுமார் 3 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட வாவியோர சுவர், கல்லடி கடற்கரையில் 3 கோடி ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள நடைபாதைக் கூடாரம்,மற்றும் சிறுவர் விருந்தகம் உட்பட பல உல்லாசப்பயயணிகளைக் கவரும் இடங்களை அவர் திறந்து வைப்பாரென மாவட்ட செயலகம் தெரிவித்துள்ளது.
0 commentaires :
Post a Comment