கிழக்கு மாகாண முதலமைச்சர் செயலகமும் கிழக்கு மாகாண கல்வித்திணைக்களமும் இணைந்து நடாத்திய மாபெரும் இப்தார் நிகழ்வு இன்று(04.09.2010) கிண்ணியா மத்திய கல்லூரியில் இடம் பெற்றது. மாகாண கல்விப் பணிப்பாளர் நிஸாம் தலைமையில் இடம்பெற்ற இவ் நிகழ்விற்கு சர்வ மதப்பெரியார்கள் மற்றும் மூவினத்தவர்களும் கலந்து சிறப்பித்தமை விசேட அம்சமாகும். இந் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய கிழக்கு மாகாண முதலமைச்சர் சி. சந்திரகாந்தன், அனைத்து மதங்களுமே மக்களை நலவழிப்படுத்து வதையே கூறுகின்றது. எனவே அனைவரும் ஒற்றுமையாக வாழ வேண்டும். அதற்காக ஒவ்வொருவரினதும் விசேட பண்டிகை நாட்களில் அனைவரும் கலந்து சிறப்பிக்க வேண்டும். இன மத பேதங்களைக் கடந்து சகோதரத்துவத்துடன் கூடிய அபிவிருத்தி நிறைந்த கிழக்கு மாகாணத்தை கட்டியேழுப்ப அனைவரும் முன்வரவேண்டும். அதற்கு இவ்வாறான நிகழ்வுகள் உந்துசக்கிதயாக அமையும் என தான் நம்புவதாகவும் குகுறிப்பிட்டார். இவ் இப்தார் நிகழ்வில் கிழக்கு மாகாண சபையின் தவிசாளர் பாயிஸ், மாகாண சபை உறுப்பினர்; ஹஸன் மௌலவி, முதலமைச்சர் செயலக அதிகாரிகள் , கல்வித்திணைக்கள அதிகாரிகள் மறறறும் பலர் கலந்து கொண்டார்கள்.
0 commentaires :
Post a Comment