9/19/2010

மட்டு.விழிப்புலனற்றோர் பாடசாலைக்கு அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் விஜயம் _

 
 
  மட்டக்களப்பு விழிப்புலனற்றோர் பாடசாலைக்கு இன் காலை 9.30 மணியளவில் விஜயம் செய்த மீள்குடியேற்ற பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் பாடசாலை நிருவாகத்தினருடன் பாடசாலையின் குறை நிறைகளைக் கேட்டறிந்ததுடன் அங்கு கற்றுவரும் மாணவ மாணவிகளையும் சந்தித்துக் கலந்துரையாடினார்.

இந் நிகழ்வில் அமைச்சரின் இணைப:புச்செயலாளர் பி.ரவீந்திரன், கொழும்பைச் சேர்நத வர்த்தகர் செல்வி ஜமுனா, விளிப்புலனற்றோர் பாடசாலை நிருவாக சபை த்தலைவர் ஏ.ஜீவராஸா, செயலாளர் ஏ.ரவீந்திரன், பொருளாளர், ஜீ வரதராஜன், நிருவாக சபை உறுப்பினரன முருகு தயானந்தன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

விளிப்புலனற்றோர் பாடசாலை நிருவாகத்தினர் தமது மாணவர்களின் தொழில் பயிற்சிகளை மேம்படுத்தும் நோக்கிலும் எதிர்கால செயற்திட்டங்களுக்காகவும் தொழில் பயிற்சி நிலையம் அமைப்பதற்கும் அத்துடன் வலது குறைந்தோருக்கான ஆசுவாசப்படுத்தும் நிலையம் ஒன்ரறை அமைப்பதற்கும் தமது முன்பகுதியில் உள்ள காணியை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்குமர்றும் கோரிக்கை விடுத்தனர்.

அனைவருடனும் கலந்துரையாடிய அமைச்சர் பாடசாலையின் தேவைகள் மற்றும் பிரச்சினைகளுக:கு விரைவில் ஆவன செய்து தருவதாக தெரிவித்தார். ___

0 commentaires :

Post a Comment