9/23/2010

சோமாலிய பிரதமர் ராஜினாமா

ஆபிரிக்காவில் உள்ள சோமாலி யாவில் இஸ்லாமிய தீவிரவாதம் காரணமாக கடந்த 3 ஆண்டுகளாக வன்முறைகள் அதிகரித்து இருக்கின்றன. அதை கட்டுப்படுத்த முடியாததால், பிரதமர் ஒமர் அப்திராஷித் ஷார்மார்கே தன் பதவியை ராஜினாமா செய்தார். இது தொடர்பாக அவர் நிருபர்களிடம் கூறுகையில், பாதுகாப்பற்ற நிலைமை அதிகரித்து வருவதால் நான் பதவி விலக தீர்மானித்தேன் என்று குறிப்பிட்டார்.
அப்போது ஜனாதிபதி ஷேக் ஷரீப் அகமது உடன் இருந்தார். அவர் பிரதமரின் முடிவை வரவேற்பதாக தெரிவித்தார். விரைவில் புதிய பிரதமரை நியமிப்பேன் என்றும் அவர் தெரிவித்தார்.

0 commentaires :

Post a Comment