விவசாய அபிவிருத்தி அமைச்சினால் மட்டக்களப்பு மாவட்டத்தில் 150 விவசாய ஆராய்ச்சி உற்பத்தி உதவியாளர்கள் விரைவில் நியமிக்கப்படவுள்ளதாக கமநல அபிவிருத்தி திணைக்கள மட்டக்களப்பு மாவட்ட உதவி ஆணையாளர் டாக்டர் ஆர்.ருஸாங்கள் தெரிவித்தார்.
இப்பதவிக்கான விண்ணப்பம் கோரிய போது மாவட்டம் முழுவதிலுமிருந்து 5800 பேர் விண்ணப்பித்துள்ளனர்.
இவர்களுக்கான நேர்முகத்தேர்வுகள் எதிர்வரும் 20 ஆம் திகதி கள்ளியங்காடு கமநல அபிவிருத்தி திணைக்கள தலைமையகத்தில் நடைபெறுமென அவர் மேலும் தெரிவித்தார்.
விண்ணப்பதாரிகளுக்கு நேர்முகத் தேர்விற்கான கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளதாகவும் அவர் சொன்னார்.
க.பொ.த சாதாரண தரம் சித்தியடைந்தவர்கள் இதற்கு விண்ணப்பக்க முடியுமெனவும் அவர் மேலும் குறிப்பிட்டார். ___
0 commentaires :
Post a Comment