வெனிசூலாவில் ஞாயிற்றுக்கிழமை நடந்த பாராளுமன்றத் தேர்தலில் ஜனாதிபதி ஹியூகோ சாவெஸின் கட்சி வெற்றி பெற்றது. இதுவரை வெளியான முடிவுகளின் பிரகாரம் சாவெஸின் வெனிசுலா ஐக்கிய சோசலிசக் கட்சி (பி.எஸ்.யு.வி) 95 ஆசனங்களைப் பெற்றதாகவும் எதிர்க்கட்சி எம்.யு.டி 63 ஆசனங்களையும் சாவெஸின் கட்சியிலிருந்து பிரிந்து சென்ற பி.ரி.ரி கட்சி 02 ஆசனங்களைப் பெற்றதாகவும் அறிவிக்கப்பட்டது. ஞாயிற்றுக்கிழமை நடந்த இத்தேர்தலில் 17 மில்லியன் பேர் வாக்களித்தனர்.
66% வீதமான வாக்குகள் எண்ணப்பட்ட நிலையிலேயே சாவெஸின் கட்சிக்கு 95 ஆசனங்கள் கிடைத்துள்ளன. பெரும்பான்மையைப் பெற வேண்டுமானால் 110 ஆசனங்களைப் பெற வேண்டும். இதனைப் பெற்றால் 2012ல் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் சாவெஸ் போட்டியிடவும் வெற்றி பெறவும் வாய்ப்பேற்படுமென அரசியல் அவதானிகள் தெரிவித்துள்ளனர்.
வெனிசூலாவின் ஜனாதிபதியாக ஹியூகோ 2005ம் ஆண்டு பதவியேற்றார். பின்னர் 2009ல் மீண்டும் வெற்றிபெற்று ஜனாதிபதியானார். அந்நாட்டு அரசியலமைப்பின்படி இரண்டு தடவைகளுக்கு மேல் ஒருவர் ஜனாதிபதியாக இருக்க முடியாது. மூன்றாவது முறையும் போட்டியிட எண்ணியுள்ள சாவெஸ் அரசியலமைப்பை மாற்றம் செய்ய எண்ணியுள்ளார். இம்மாற்றத்தைச் செய்ய பாராளுமன்றத்தில் பெரும்பான்மைப் பலம் தேவைப்படும்.
இம்முறை தேர்தலில் சாவெஸ் 110 ஆசனங்களைப் பெற்று பெரும்பான்மையைப் பெறுவார். பெற்றால் மீண்டும் மூன்றாவது முறையாக 2012ல் சாவெஸ் போட்டியிடுவார். தேர்தல் திணைக்களம் ஒவ்வொரு கட்சியும் பெற்ற ஆசனங்களையே வெளியிட்டது. ஆனால் ஜனாதிபதி சாவெஸ் கட்சிகள் பெற்ற வாக்குகளையும் வெளிப்படுத்தினார். 5422040 வாக்குளை பி.எஸ்.யு.வி. தனது கட்சியும் 5320175 வாக்குகளை எம்.யு.டி. பிரதான எதிர்க்கட்சியும் 520000 வாக்குகளை தன்னிலிருந்து பிரிந்துபோன பி.ரி.ரி.கட்சியும் பெற்றதெனத் தெரிவித்தார். பி.ரி.ரி பெற்ற வாக்குகள் இடதுசாரிகளின் வாக்குகளே.
எனவே எதிர்க்கட்சியான எம்.யு,டி.யுடன் இவர்கள் கூட்டுச் சேர்வது எவ்வகையிலும் நியாயமில்லை என்றும் ஜனாதிபதி சாவெஸ் சொன்னார். மூன்றாவது முறையாகப் போட்டியிட அனுமதி கோரி ஏற்கனவே நடத்தப்பட்ட சர்வஜன வாக்கெடுப்பிலும் ஜனாதிபதி சாவெஸ் வெற்றி பெற்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
இப்போது பாராளுமன்றத் தேர்தலில் கிடைத்துள்ள வெற்றி சாவெஸைப் பலப்படுத்தும். தேர்தல் முறைகேடாக நடந்தது என்ற குற்றச்சாட்டையும் சிறிய பெரும்பான்மையிலான வெற்றி என்ற விமர்சனத்தையும் சாவெஸ் நிராகரித்தார். பி.ரி.ரி கட்சியின் வாக்குகளும் தன்னுடையதே. தனது கொள்கைக்குச் சார்பானதே என விளக்கினார். அமெரிக்காவுக்கு சிம்ம சொர்ப்பணமாகவுள்ள சாவெஸின் வெற்றி மேற்குலக நாடுகளை அதிரவைத்தது.
0 commentaires :
Post a Comment