கிழக்கிலங்கையில் மிகவும் பிரசித்தி பெற்ற முருகப்பெருமானின் ஆலயங்களுள் மிகப் புராதனமானதும் பிரசித்தி பெற்றதுமான ஆலயம் வெருகல் முருகப் பெருமான் ஆலயமாகும். திருகோணமலை மாவட்டத்தின் சேருநுவர பிரதேச செயலாளர் பிரிவில் அமையப்பெற்ற மிகப் பெரும் பழமை வாய்ந்த ஊரான வெருகலில் இவ் ஆலயம் அமைந்துள்ளது. 18 நாட்கள் மிகவும் விசேடமாக உற்சவங்கள் இடம்பெற்று இறுதி நாள் தீமிதித்தலுடன் தீர்த்தோற்சவமும் இடம்பெறும். எதிர்வருகின்ற 27.09.2010 அன்று தீர்த்தோற்சவம் இடம்பெறும். இன்று நண்பகல் சுபநேரம் 12.05க்கு கொடியேற்றத்துடன் திருவிழா ஆரம்பமானது. இக் கொடியேற்ற நிகழ்விற்கு கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களும் வருகை தந்திருந்தார்.
0 commentaires :
Post a Comment